Sunday, 6 June 2021

Mood swings



இந்த வார்த்தைய இன்னிக்கு தேதிக்கு எளிதில் கடந்திடும்படி முன்னேறியருக்கிறது இந்த தலைமுறை...  நல்ல விசயம்.. Mood swing பெண்களுக்கு ஏற்படும்ங்கிறத இந்த தலைமுறை ஆண்கள் நல்லவே புரிஞ்சிகிறாங்கனு சொல்லலாம்.. 


ட்விட்டர்ல ஒருத்தர் எழுதுறார் " Mood swing"ங்கிற பேரில் இவளுக பாடா படுத்துறாளுக///


ஆக, ஒரு பெண் எரிச்சலடையுறானா ஒருவேளை Mood swingஆ இருக்கும், பீரியட்ஸ் நாள் நெருங்களாம், ஹார்மோனல் மாற்றம்னு அழகா புரிஞ்சிகிட்டு ப்போய்த்தொலைனு கடக்கும் மனமுதிர்ச்சி கடந்த தலைமுறை ஆண்களுக்கு இருந்திருக்காது என அவதானிக்கிறேன் பார்த்தவரையில், மன அழுத்தத்தை பேய் பிடிச்சிருக்குனு கடந்த தலைமுறை பெண்களே சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன்.. 


 Mental Stress, Mood swings  பற்றி ஆரோக்கியமான விவாதங்களை ஆங்காங்கே காணும் போது சிறிது நம்பிக்கை ஏற்படுகிறது இந்த தலைமுறை ஆண்களுக்கு இணையம் ஏதோ கற்றுக்கொடுக்கிறது, 


I need a man who can handle my mood swingsனு பட்டவர்த்தமாகவே சொல்லும் பெண்கள் இன்னும் ஆச்சரியப்படுத்துகறார்கள்.. Mood swings aren't suppressed feelings, mixed emotionங்களின் வெளிப்பாடு.. 


வைரமுத்து மேல எவ்வளவு விமர்சனம் வந்தாலும் ஒரு கலைஞனா மிகுந்த மதிப்பும் பிரம்மிப்பும் இருக்கு, சில பாடல்கள் வார்த்தைகளா கடந்திடுவோம் ஆனா சில பாடல்கள் நம்மல தேக்கி வச்சிடும்ல அப்பிடி  பெண்களோட  Mood swing பத்தி வைரமுத்து எழுதிருக்கார் இந்த பாட்டுல.. 


👇👇👇👇👇👇


ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு

மேகத்த கிழிச்சு எரியும்...


பொண்ணு மனசு ஒரு தினுசு

அதில் மிருகமும் தெய்வமும் வாழும்

ஹேய் புரிஞ்சதா.. 

பொண்ணு மனசு ஒரு தினுசு

அதில் மிருகமும் தெய்வமும் வாழும்

என்னை பந்தாடும் மிருகம்

கூரு போட்டு கூத்தாடும் தெய்வம்

"அவ நெனப்ப புரிவதில்லே

ஒரு ஆம்பள பொழப்பு அழியும்"


நீ கொஞ்சம் போல மெல்ல சிரிக்க

ஆத்தாடி என்ன பண்ணி நான் தொலைக்க

பார்வையால் இருதயம் நினைக்கட்டுமா

பாதத்த இமைகளில் வருடட்டுமா

நீ சொல்லும் வார்த்தைக்கு வாசிக்கட்டுமா

கோபத்த கொண்டாடி ரசிக்கட்டுமா//


என்னை என்ன தான் செய்யச்சொல்ற படித்தாத என்னைப்போட்டுனு சொல்ற மாதிரியான பாட்டு... 


இந்த பாட்டு வந்து 6 வருசமிருக்கும்  ஆனா இவ்வளவு நாள் காதுல தான் கேட்டுகிட்டு இருந்தேன் இந்தப்பாட்ட இப்ப தான் மூளைல கேட்குறேன்... 


காட்சி அமைப்பு அவ்வளவு ஈர்க்கல அதுனால பாக்க பிடிக்காது,  பாட்டுக்கு ஆடச்சொன்னா அவங்க பாட்டுக்கு ஆடுவாங்க இதுல.. தனுஷோட குரல்க்காக கேட்க ஆரம்பிச்சு வைரமுத்து வரிகளுக்காக பிடிச்சுப்போன பாட்டு ❤❤❤❤ பாட்ட கேட்டுப்பாருங்க... 

https://www.youtube.com/watch?v=sqQyHHBCKTU

Wednesday, 7 October 2020

அகவை 31

30 வயசாகிருச்சா என்ற ஆச்சரியமோ,பீதியோ ஏற்படவில்லை... 30 வயசுக்குள்ள நல்ல Exposure கிடைச்சதா? நல்லா படிச்சிருக்கோம்( I meant graduation) 30 வயசுக்கு 1 bachelor degree, 2 Master degreeனு வாங்கியாச்சு, கர்நாடக சங்கீதம்,பரதம்,ஸ்விம்மிங்,கராத்தே,வாலிபால்,அத்லெட், தையல்,பிசினஸ்,பார்ட் டைம் ஜாப், ஃபுல் டைம் ஜாப், Manufacturing industry, Fortune 100 company, startup company, Small size company, MNCனு எல்லா லெவல் கம்பனிலயும் அனுபவம் வகிச்சாச்சு வார இதழ்கள், பெண்களுக்கான பிரத்யேக புத்தகங்கள், இணையதளம், சமூக வலைதளங்கள்லயும் நம்ம பேர பதிச்சாச்சு... 2007ல ஆர்குட் ஆரம்பிச்சு நேத்து வந்த ROPOSO, Josh ஆப் வரை அத்தனையும் அக்கவுண்ட் இருக்கு... நம்மலா கஷ்ட்டப்பட்டு( பல தோல்விய தழுவி) சமையலும் போட்டோகிராப்பியும் கத்துட்டுருக்கோம்.. தோழிகளுடன் பிக்னிக், சென்னைக்குள்ளையே அவுட்டிங், குடும்பத்தோட கோவில் குளம்னு சுத்தி, ஆத்திகத்தும் நாத்திக்கத்துக்கும் இடைய பகுத்தறிஞ்சு பயணிக்கிற பண்பும் கிடைச்சிருக்கு... 30 வயசுக்கு 30 புத்தகமாச்சும் படிச்சிருக்கனும்... ஆனா வாசிப்பு குறைவா  போச்சு, இது கிடைக்கலையேனு ஏங்குற மனசையும் தட்டிவிட்டு போப்போனு தட்டுகுடுத்து, மத்தவங்கள மனசுநோகாம பாத்துக்கிடுறது இருக்கட்டும், நம்ம மனச யாரு பாத்துகிடுவாங்கனு மனசு சந்தோசமா வச்சிக்கிட மனசுக்கு பிடிச்ச சாப்பாடு, பிடிச்ச இடங்கள், புத்தகங்கள், மனிதர்கள்னு மனச சந்தோஷப்படுத்த அத்தனை முயற்சியவும் செய்ற மூளை வாய்க்கப்பெற்றிருக்கிறேன்... நம்ம மனசுக்கு நம்ம தான் மீட்பன்...ஏன்னா  எல்லாம் சரியாகிரும்னு எனக்குத்தெரியும், தட்கல் முறைல சரியாகனும்னு பதற்றப்படுறப்ப தான் தடுமாறுறேன்... Brain & Body should sync, இத்தனை வயசாகியும் உணர்ச்சி வசப்படுறோம், கொதிநீரா கொதிக்கிறோம் , கொட்டினப்பறகு ஆறிடுறோம்..ஆறுறது தான் அறம்னா கொதிக்கிறதும் அறம் தான்னு நம்புறேன்.. 

கோபம் செயல்கள் மீது தான், ஆனா துரதிர்ஷ்ட்டவசமா செயல்களே மனிதர்கள தீர்மானிக்கிது.. சூழ்நிலைகளை மன்னிச்சு மனிதர்களிடமிருந்து விளகுமளவிற்கு தான் பக்குவம் இருக்கு.. மனிதர்களை மன்னிச்சு சூழ்நிலைய புறந்தள்ளுற முதிர்ச்சி வாய்க்கப்பெறனும்.. 

எதுலயாச்சும் போதை இருக்கனும் அழகு, ஆரோக்கியம்,சாப்பாடு,ஊர் சுத்துறது, பணம் சம்பாதிக்கிறது,பணம் செலவு பண்றது,அரட்டையடிக்கிறது, புகழ், இப்பிடி.. இந்த மாதிரி எதுலயாச்சும் போதை இருந்தா தான் நம்மல நம்மே இயக்க முடியும்.. 

30 வயசுக்கு இந்த அனுபவம் குறைவுனாலும்.. கற்றவையும் பெற்றவையும் தன்னை உருமாத்தி வெவ்வேறு செயல்கள்ல வெளிப்படுத்தும்... 

pan , ஆதார், வாக்காளர் அட்டைன்னு எல்லாத்துலயும் பிறந்த தேதியா இந்த தேதிய குடுத்துருக்கோம்.. இந்த தேதில ஒரு நல்ல விஷயம் என்னனா நம்மல மன்னிக்கிறதுக்கும், சகிச்சுக்கிறதுக்கும், போனா போனு அலட்சிய படுத்துறதுக்கும் பிறந்தநாள் ஒரு நல்ல சாக்கு!! 

வயதை கணிப்பதற்கும், இன்றிலிருந்து கூட ஒரு வயது ஆகிறது என்று எனக்கு நானே நினைவுப் படுத்த இது ஒரு நாள்!!  



என்னோட இத்தனை வருச அனுபத்துல சொல்றேன் முடிஞ்சா ஞாபகம் வச்சிக்கோங்க 


👇👇👇👇👇

Take care of your Financial, Mental & Physical Health... 

Tuesday, 4 August 2020

பச்சைப்பயறு தோசை / பெசரட்டு


 

தேவையான பொருட்கள்

பாசிப்பயறு – 150 கிராம்

இட்லி அரிசி/ சாப்பாட்டு அரிசி – 150 கிராம்

சீரகம் – ½ ஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

இஞ்சி – சிறிய துண்டு

மிளகு – 3,4

 

செய்முறை

பாசிப்பயறு & அரிசியை நன்கு தண்ணீரில் களைந்து இரவு முழுவதும் ஊறவைக்கவும், காலையில் மிக்ஸி ஜாரில் அரிசி , சீரகம், இஞ்சி, மிளகு, பச்சை மிளகாய் , உப்பு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும் பிறகு பாசிப்பயறு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும், அரிசி சற்று கொரகொரப்பாக இருக்க வேண்டும் பயறு நன்கு மசித்திருக்க வேண்டும். இந்த மாவை புளிக்க வைக்க தேவையில்லை அரைத்த உடனே தோசை செய்ய வேண்டும். பிரிஜ்ஜில் வைத்து பயன்படுத்தினால் ருசிக்காது, அரைத்தவுடன் காலி செய்துவிடவேண்டும் , இஞ்சி சட்னி இதற்கு நல்ல சைடிஷ், மிளகாய் சட்னியும் இதற்கு  நல்ல காம்போ

 


வெள்ளை பூசணி குருமா( தக்காளி , பூண்டு ,வெங்காயம் இல்லாத குருமா)


தேவையான பொருட்கள்

வெள்ளை பூசணி- 300 கிராம்

பாசிப்பருப்பு – 50 கிராம்

தேங்காய் – 3 துண்டுகள்

சீரகம் – ½ ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

சோம்பு – ¼  ஸ்பூன்

மஞ்சள்த்தூள் – ¼ ஸ்பூன்

 

செய்முறை

 

குக்கரில் பாசிப்பருப்பு + வெள்ளை பூசணி துண்டுகள் + மஞ்சள்த்தூள் சேர்த்து 2 விசில் வரும்வரை நன்கு வேகவைத்து மசித்துக்கொள்ளவும்

கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து,மசித்த கலவையோடு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்

தேங்காய்த்துண்டுகள் + சோம்பு + பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மை போல அரைத்து, கொதிக்கும் பூசணி பருப்பு கலவையில் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

 

வெங்காயம் + கரம் மசாலா விருப்பமிருந்தால் சேர்க்கலாம்..

 

 

அரசாணிக்காய்/ பரங்கிக்காய்/ மஞ்சள் பூசணி/ செகப்பு பூசணிக்காய் சூப்



 

தேவையான பொருட்கள்

மஞ்சள் பூசணி – 200 கிராம்

பூண்டு – 4

மிளகு – ¼ டீஸ்பூன்

சீரகம் – ½ டீஸ்பூன்

 

செய்முறை

 

மஞ்சள் பூசனிக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும், பிரஷர் குக்கரில் பூசனிக்ககாய்களை சேர்த்து, மிளகு, சீரகம், பூண்டுப்பற்கள், தேவையான அளவு உப்பு, தண்ணீர்  சேர்த்து 3-5 விசில் வரும் வரை வேக வைக்கவும்,பிறகு தண்ணீரை நீக்கி நன்கு மசித்துக்கொள்ளவும், வேக வைத்த தண்ணீரோடு சிறிது தண்ணீர் சேர்த்து தேவைக்கேற்ப சுட  வைத்து பரிமாறவும்.. மிக்ஸியில் அரைப்பதை  விட நன்கு மசித்து குடிப்பது சிறப்பு!! தேவையெனில் சிறிது வெண்ணை / ஃப்ரஷ் கிரீம் சேர்த்து பரிமாறலாம்.

 


Friday, 31 July 2020

வாழைப்பூ கோலா உருண்டை


தேவையான பொருட்கள்

வாழைப்பூ – ஒரு பூவில் பாதி

பொட்டுக்கடலை / கடலைப்பருப்பு – 100 கிராம்

( கடலைப்பருப்பு எனில் 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்)

பச்சை மிளகாய் – 2

சோம்பு – ½ ஸ்பூன்

பூண்டு – 5 பற்கள் தோலுடன்

இஞ்சி – 1 சிறிய துண்டு

கருவைப்பிலை – சிறிது

பெருங்காயம் – 1 டீஸ்பூன்

தேங்காய் – 2 துண்டுகள்

செய்முறை

மிக்ஸியில் எல்லாவற்றையும் போட்டு ஓரளவிற்கு கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும், வெங்காயம் தேவையெனில் சேர்த்துக்கொள்ளவும் , எண்ணெய் நன்கு சூடானதும், மாவினை உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து  எண்ணெய் சலசலப்பு நின்றதும் எடுக்கவும். இந்த மாவினை உடனே காலி செய்து விடவேண்டும், ஃபிரீஜ்ஜில் வைத்து மறுநாள் பயன்படுத்தக்கூடாது.



Wednesday, 29 July 2020

எள்ளு சாதம்


 தேவையான பொருட்கள்

சாதம் – 1 கப்

கறுப்பு எள்ளு – 2 டேபிள் ஸ்பூன்

கறுப்பு உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்

வெந்தயம்-1/4 டீ ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

மிளகு – ¼ டீ ஸ்பூன்

வரமிளகாய் – 2

உப்பு & நல்லெண்ணய் – தேவைக்கேற்ப

 

ஒவ்வொன்றாய் வரிசையாக வறுத்து சூடு ஆறியதும் மிக்ஸியில் அரைத்து பொடித்துக்கொள்ளவும், கடாயில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணய் சேர்த்து நன்கு காய்ந்ததும் கடுகு,உழுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு/ கடலை, வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொறிந்ததும், அரைத்த எள்ளுப்பொடியினை எண்ணையில் சேர்த்து நன்கு கலந்து தீயினை நிறுத்திவிட்டு , வடித்த சாதத்தினை சேர்த்து நன்கு கலக்கவும், எள்ளு சாதம் தயார்.