தேவையான பொருட்கள்
மஞ்சள் பூசணி – 200 கிராம்
பூண்டு – 4
மிளகு – ¼ டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
செய்முறை
மஞ்சள் பூசனிக்காயை தோல் நீக்கி
சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும், பிரஷர் குக்கரில் பூசனிக்ககாய்களை சேர்த்து, மிளகு,
சீரகம், பூண்டுப்பற்கள், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து 3-5 விசில் வரும் வரை வேக வைக்கவும்,பிறகு
தண்ணீரை நீக்கி நன்கு மசித்துக்கொள்ளவும், வேக வைத்த தண்ணீரோடு சிறிது தண்ணீர் சேர்த்து
தேவைக்கேற்ப சுட வைத்து பரிமாறவும்.. மிக்ஸியில்
அரைப்பதை விட நன்கு மசித்து குடிப்பது சிறப்பு!!
தேவையெனில் சிறிது வெண்ணை / ஃப்ரஷ் கிரீம் சேர்த்து பரிமாறலாம்.

No comments:
Post a Comment