Monday, 27 July 2020

மக்காச்சோள மாவு தோசை





தேவையான பொருட்கள்

மக்காச்சோள மாவு - 100 கிராம் 

கோதுமை மாவு : 50 கிராம் 

பச்சரிசி மாவு  - 2 டேபிள் ஸ்பூன் 

கேரட் - 1 ( துருவியது )

பெரிய வெங்காயம் – 1( பொடியாக நறுக்கியது)

பெருங்காயத்தூள் – சிறிதளவு

கறிவேப்பிலை - 4,5 இலைகள் 

பச்சை மிளகாய் - 2 




செய்முறை:

மக்காச்சோள மாவு ( மஞ்சள் நிறத்தில் இருக்கும் ) 100 கிராம் அளவில் எடுத்துக்கொள்ளவும், அதில் பாதி கோதுமை மாவு , 2 டேபிள் ஸ்பூன் பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும், சாதா தோசை மாவைப்போல் கலந்து கேரட் , வெங்காயம், பச்சை மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து பெருங்காயத்தூள் சேர்த்து கல் காய்ந்ததும் தோசை வார்க்கவும். ரவை தோசையைப் போல மாவை ஊற்ற வேண்டும். தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும். 

No comments:

Post a Comment