காலஹஸ்தி கோவிலுக்கு 2013ல் சென்றேன் என் அறைத்தோழியுடன் , அவர் என் நல விரும்பியும் கூட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர், நான் அக்கான்னு ரெம்ப பாசமா பழகுற நபர். காலஹஸ்தி கோவிலுக்கு ராகு , கேது பரிகாரம் பண்ணனும்ன்னு 6 வருஷாமா முயற்சி பண்ணி அவங்களுக்கு என்கூட வரணும்ன்னு விதி!! போனோம் ரெண்டு பேரும். முதலில் மிகுந்த எதிர் பார்ப்புடனும் உர்ச்சாகத்துடனும் என்னுடன் வந்தார் எனக்கு பல முறை அங்கு சென்றுள்ளதால் ஒரு எதிர்பார்ப்புமில்லை, கோவிலை நெருங்கியதும் ஒரு 30 வயது மதிக்கத்தக்க ஆண் எங்களை அணுகிறார் “ சிஸ்டர் நீங்க பரிகாரம் பண்ண போறீங்களா?? என்றார்” நான் சற்று சுதாரித்துக்கொண்டு இல்லையென்றேன் அக்கா ஆம் என்றார், அக்காவை பார்த்து அக்கா ஏன் சொன்னீங்க , எதாச்சும் சீட்டிங் போடுவாங்கக்கான்னு சொன்னேன் , அவர் கேட்கலை ஆமான்னு சொன்னதும் ஒரு கடைக்கு கூட்டிபோனார் அந்த ஆண் , கைல ஒரு விளக்கு 2செட் கொடுத்தார் ( நெய், திரி , அகல் விளக்கு). அது ராகு கேதுவுக்காம். 40 ரூபாய் சிஸ்ட்டர்ன்னு சொன்னார் , நான் மனசே இல்லாம வாங்குனேன் அக்கா சொன்னாங்கன்னு , அக்கா ரெம்ப பக்தியோட வாங்கினாங்க அங்க கோவிலுக்கு வெளியில ஒரு பிள்ளையார் கோவில் நவகிரக விநாயகராம் அங்க விளக்கு போட்டா க்கல்யானம் சீக்ரம் நடக்குமாம் இத அந்த அண்ணான் வார்த்தைக்கு வார்த்தை சொன்னார், அது தான நமக்கு வேணும் , ஸோ அதுனால விளக்கு ஏத்தியதும் 80ரூபாய் வாங்கிட்டார் ஒரு விளக்கு 40 ரூபாய் 2 விளக்கு 80 ரூபாய்ன்னு நல்லா கணக்குப்போட்டார், கூடவே வில்ல இல்லை எண்ணி பார்த்தா 10 இல்லை தான் இருக்கும், அது கூட ரெண்டு ரோஸ் 20 ரூபாய் ரவுண்டா 100 முதல் ஆப்பு , அது தேவையில்லாத ஒன்று. முதல்ல அந்த ஆப்பு முடிஞ்சது எனக்கு ரெம்ப கஷ்டமா போச்சு அக்கா இது வேஸ்ட்டுக்கான்னு சொன்னேன் சும்மா வா சாமிக்கு கணக்குப்பாக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க ,கோபுரத்தை கும்பிட்டு வலது காலை எடுத்து வச்சு உள்ள நுழைஞ்சதுமே கைல பூவோட ஒரு அம்மா 50 வயசு இருக்கும் கைல அந்த பூ பேரு என்னன்னு தெரியல ரெண்டு மாலை குடுத்தாங்க ராகு , கேதுக்கு போடனும்ன்னு சொன்னாங்க கண்ணுல ஜாடை காமிச்சேன் அக்கா வேண்டாம்ன்னு, அக்கா கேட்கலை நானும் வாங்கினேன் , 30 ரூபாய் போச்சு மனசுக்குள்ள சாமிக்கு கணக்கு பாக்க கூடாது அக்கா சொன்னது பட்டது, அடுத்து தான் சீனே ஒரு சின்ன பைய்யன்( என்னை விட)20 வயசு இருக்கும் அக்கா தெலுங்கா ?? தமிழ்லான்னு கேட்டான். அக்கா தெலுங்குன்னு சொன்னாங்க அந்த பையான் கைல இருக்கு அந்த மாலைய இங்க போடுங்கன்னு சொன்னான் ஒரு பிள்ளையார் இருந்துச்சு போட்டாச்சு உள்ள , சுத்தி வாங்கன்னு சொன்னான் சுத்தியாச்சு கைல 5 மஞ்சு கயிறு கொடுத்தான் , மூளை வேலை பாக்க ஆரம்பிச்சது இன்னும் கிரிமினலா எனக்கு அக்கா எவளோ ன்னு கேளுங்கன்னு சொன்னேன் 20 ரூபாய்ன்னு சொன்னான், யோசிச்சோம் ரெண்டுபேரும் அந்த கேப்புல கைல கயிற கொடுத்தான் வேண்டாம்ன்னு சொல்ல ரெண்டு பேருக்கும் மனசு வரலை தாலி சென்டிமன்ட் சரி கல்யாணம் ஆகத்தான வந்துருக்கோம்ன்னு சரின்னு தலைய சுத்தி உள்ள போடுங்கன்னு சொன்னான் பிள்ளையார் மேல அதும் இடது கைல, எனக்கு இன்னும் யோசனை அதிகமாகிருச்சு தாலிய இடதுகைல அதும் anti clock vise சுத்தி போடணுமான்னு அந்த பைய்யன் தோஷம் நிவர்த்தியாகும்ன்னு சொன்னான் சரின்னு தலைய சுத்தி தாலிய தூக்கி போட்டோம் அப்புரம் அந்த பையன் கைல 20ரூபாய் குடுத்தேன் அவன் மேடம் நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க ஒரு கயிறு 20 ரூபாய் 5 கயிறு100 ரூபாய்ன்னு சொன்னான் பொங்கியாச்சு தாலிக்கயிறு 2ரூபாய் தான் அத 20 ரூபாய்ன்னு சொன்னான் போனா போகுதுன்னு நினச்சா மஞ்ச கயிற எவளாச்சும் 100 ரூபாய்க்கு வாங்குவாளான்னு, அக்கா நல்லா திட்டி விட்டாங்க தெலுங்குல அதுக்கபோரம் எனக்கு ஒரு சந்தேகம் வந்துச்சு ஆமா மாலைய ராகு கேட்க்கு தான போடணும் பிள்ளையார் மேல போட்டோம்ன்னு சொன்னேன் அக்காவும் திரும்பி பாத்தாங்க ஆமான்னு ரெண்டு பேரும் யோசிக்கும் பொழுது அவன் சொன்னான் இது தான் ராகு கேதுன்னு பிள்ளளையார பாத்து எனக்கு சிரிப்பு கண்ட்ரோல் பண்ணவே முடியலை ராகு கேதுவான்னு பிள்ளையாருக்கு பக்கத்துல பாம்பு சிலை குட்டியா இருந்துச்சு அது தான் ரகு கேதுவாம் , சரின்னு வந்தாச்சு, சரி அக்கா கோவப்படாதீங்கன்னு சமாதானம் பண்ணிட்டு பரிகாரத்துக்கு 300ரூபாய் கவுண்டர்க்கு போனோம், நிக்குற நேரத்துல வடிவேல் காமெடி நியாபகம் வந்துச்சு “ பஸ்ஸுக்கு டிக்கட் 5 ரூவாய் பூ 50 ரூவாய்ன்னு “ தாலியபோய் 100ரூபாய் கொடுத்துவாங்குவாங்கலான்னு, பரிகாரத்துக்கு போய் உக்காந்தோம் ஒரு பையன் வந்தான் சின்ன பைய்யன் பரிகார சாமான்கள் டிக்கடோட குடுத்துட்டாங்க அத ஆர்வமா வாங்கினான் பையன் அடுக்கி வைக்க ஆரம்பிச்சான் நீட்டா முடிச்சுட்டான் புன்னகையோட ரெம்ப தேங்க்ஸ் தம்பின்னு சொன்னேன் அக்கா இதுக்கு 20 ரூபாய்ன்னு சொன்னான் கடுப்பின் உச்சம் , சரி போகட்டும் பரிகாரத்த பாப்போம்ன்னு முடிச்சாச்சு அதுக்கபோரம் தட்சணை 51 ரூபாய் வச்சுருங்கன்னு சொன்னாங்க , பழகிருச்சு சரின்னு வச்சாச்சு இது எல்லாத்துக்கும் இடையில எல்லாரும் யூஸ் பண்ண வார்த்தை “கல்யாணம் சீக்ரம் ஆகும்” அந்த வார்த்தைக்காக தான் அக்கா என்னையும் இழுத்தாங்க, ஒரு வழியா எல்லாம் முடிஞ்சு ரூம்க்கு வந்த பிறகு அம்மாக்கு ஃபோன் பண்ணி காலைலயிருந்து நடந்த விஷயத்த சொன்னதும் அம்மா சொன்னங்க உனக்குத்தான் தோஷமே இல்லையே அப்புரம் என்னத்துக்கு பண்ண லூசுன்னு திட்டுனாங்க சாமி மட்டும் கும்பிட்டு வரவேண்டிய தானன்னு இன்னும் நல்லா சரி காலன்டர பாப்போம் நம்ம ராசிக்கு இனிக்கு என்னா போட்ருக்குன்னு பார்த்தா “ தனுஸ் – பணவரவுன்னு போற்றுந்துச்சு” நல்லா வந்துச்சு வாயில...... எல்லாம் ஃபிராடு பரிகாரம்னு ஒண்ணுமில்லை மனசார நம்பிக்கை வச்சாலே போதும்... ஏமாந்துராதீங்க யாரும் என்னை மாதிரி...
No comments:
Post a Comment