அவருக்கு 57 வயது, கேத வீடுகளுக்கு அவ்வளவாக நான் சென்றதில்லை. மிக நெருக்கமான உறவுகளின் மரணத்திற்கு மட்டுமே சென்றிருக்கிறேன். கேதம் விசாரிக்கவும் கூச்சப்படுவேன், "இதிலென்ன கூச்சம்"என்றால், என்னிடம் பதில்லை. எழவு வீடுகளில் கவனித்திருக்கிறீர்களா? அந்த வீட்டில் கொழுத்தியிருக்கும் ஊதுபத்திக்கென்று ஒரு மணமிருக்கிறது, அங்கிருக்கும் மலர் மாலைகளுக்கென்று ஒரு வாசமிருக்கிறது, சடலத்தின் அருகிலிருக்கும் நெல்படியில் வைத்திருக்கும் அரிசியின் நிறம் கூட மங்கியிருக்கும்.. அந்த வீடே ஒரு களையிழந்து இருக்கும். இறந்தவர்களின் உறவினர்களின் கண்ணிரில் தெரியும் வலியை பார்க்கும் போது நம் நெஞ்சு பதபதக்கும். எவ்வளவு முயற்சித்தும் என்னால் அழமுடியவில்லை மேல் சொன்னவாரு இணக்கமில்லை என்பதாலோ என்னவோ.. அமைதியாக நின்றுகொன்டிருந்தேன், இறுதிச்சடங்கிற்கு அவரை தூக்கிக்கொண்டு சென்றார்கள், எழவு வீடுகளில்,சுடுகாட்டிற்கு அவரை தூக்கிச்சென்ற பின் சாப்பாடு போடுவது வழக்கம், அந்த சாப்பாடை அவசியம் சாப்பிட்டுத்தான் வர வேண்டும், இறந்தவருக்காக நாம் சாப்பிடும் கடைசி சாப்பாடு என்று யாரோ ஒருவர் சொல்லிய ஞாபகம்.
வீட்டிற்கு வந்ததும், வெந்நீருக்காக ஹீட்டரைப்போட்டுவிட்டு, யாரையும்/ எதையும் தொடாமல் அவரைப்பற்றிய எண்ணங்களை என்னில் ஓடவிட்டேன். நல்ல மனுசர் பாவம் என்றே ஒவ்வொரு விஷயங்களுக்கும் நினைத்துக்கொண்டேன். அது, எனக்கு அப்பாவின் இறப்பை ஞாபகப்படுத்தியது, அந்நாளுக்குள் சென்று மீண்டும் வாழ்ந்து வந்து அழுது முடித்தேன். இழவு வீடுகளில் அழும் மக்கள் குறைந்துவிட்டார்கள் என்பது தான் நிதர்சனம். தர்மதுரை படத்தில் வரும் "மக்க கலங்குதப்பா" பாடலில் மைக் செட் கட்டி ஒப்பாரி பாடுவார்களே அதைப்போல் 50 ஒப்பாரி கேட்டிருப்பேன் மதுரை சுற்றுவட்ட கிரமாங்களில் இது மரபு. நான் MBA படித்த கல்லூரி மதுரையை ஒட்டிய ஒரு கிராமத்தில் தான். ஒப்பாரிப்பாடல்களின் சிறப்பு என்னவென்றால், அழாதவரை அழவைக்கும், அழுபவரை மூக்கு சந்தி அழவைக்கும்,மூக்கு சிந்தி அழுபவரை மாரடித்து அழவைக்கும். ஒப்பாரிகளில், ஒருவன் வாழ்ந்த வாழ்க்கையவே பாட்டாக பாடிவிடுவது தான் கூடுதல் சிறப்பு. ஒருவர் செய்த நல்ல விஷயங்களை பாடல் பொருளாகக்கொண்டு பாடுவது பெரிய விஷயம். ஒப்பாரி என்று சதாரணமாக கடந்துவிடாதீர்கள், ஒவ்வொரு வரியும் கேட்டால்... 😱. நான் இறந்தால், பாடு பொருளாக என்ன இருக்குமோ என்று அவ்வபோது நினைத்துக்கொள்வேன், அப்போது ஒப்பாரியே அழிந்து போகும், அது சரி முதலில் நம் சந்ததியினர் நம் சாவிற்கு அழுவார்களா? என்ற கொக்கி எழுகிறது.. இறந்தவுடனே அவரை குளிப்பாட்டி, விபூதி பூசி, ஆராத்தி எடுத்து சாமி கும்பிடும் வழக்கம் இன்றும் இருக்கிறது.ஒருவர் திருமணத்திற்கு போகவில்லை என்றாலும், ஒருவரின் இறப்பிற்கு அவசியம் செல்லவேண்டும்... அந்த மனிதரை நாம் பார்க்கப்போகும் கடைசி சந்திப்பு அது... இந்த்ததலைமுறை ஆட்கள் அதில் கொஞ்சம் கடமை தவறுவதாக தோன்றுகறது...நான் உட்பட...

Nalla feel panni eluthi irukinga sister nice ippo irukkura generation ellame mobile and digital world la irukanga so yaarukum perusa feelings apdinu ethum illa mobile Kai la iruntha pothum they will normal
ReplyDeletetrue
ReplyDeleteNaanum oru blogger than ungalukku time iruntha ennoda blog ahyum konjam visit panni paarunga
ReplyDeleteoorkodangi.blogspot.in