தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு – 100 கிராம் ,
உருளைக்கிழங்கு – 1 பெரிய கிழங்கு,
பெரிய வெங்காயம் – 2 ,
தக்காளி – 1,
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3,
தேங்காய் துருவல் – 1 ஸ்பூன்,
பொட்டுக்கடலை – 1 ஸ்பூன் ,
சோம்பு – 1 ஸ்பூன்,
செய்முறை
1.
பாசிப்பருப்பு + உருளைக்கிழங்கு + மாஞ்சாள்த்தூள் மூன்றையும் ஒன்றாக கலந்து குக்கரில் 2 விசில் வைத்து வேகவைக்கவும், வெந்தவுடன் மசித்து வைத்துக்கொள்ளவும்
2.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், சோம்பு, தேவையெனில் (சிறிதளவு பட்டை, 1 பிரிஞ்சி இலை), கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது , பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வேக வைக்கவும்
3.
வதங்கியதும் பாசிப்பருப்பு+ உருளைக்கிழங்கு மசித்த கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்
4.
மிக்ஸியில் தேங்காய்த்துருவல் + பொட்டுக்கடலை + சோம்பு சேர்த்து நன்கு அரைத்து அதனை கொதிக்கும் கலவையோடு சேர்த்து கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து கொதிக்க வைத்து கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும்.

No comments:
Post a Comment