தேவையான பொருட்கள்
சாப்பாட்டு அரிசி – 100 கிராம்
பச்சரிசி – 100 கிராம்
துவரம் பருப்பு – 50 கிராம்
கடலைப்பருப்பு – 50 கிராம்
பாசிப்பருப்பு – 50 கிராம்
உளுத்தம் பருப்பு – 50 கிராம்
வரமிளகாய் – 5 ( தேவைக்கேற்ப)
தேங்காய் – ½ மூடி
கருவேப்பிலை – 2 கொத்து
செய்முறை
1.
அரிசி பருப்புகள் ஒன்றாக ஒரே பாத்திரத்தில் களைந்து 5 மணி
நேரம் ஊறவைக்கவும் , வரமிளகாயும் , கருவேப்பிலையும் இதனோடு சேர்த்துக்கொள்ளவும் (
இரவு ஊறவைத்து, மறுநாள் காலையிலும் செய்யலாம்)
2.
மிக்ஸியில் இவை அனைத்தையும் ஒன்றாக கொரகொரப்பாக அரைத்து,
தேங்காயை துருவி அதனோடு சேர்த்துக்கொள்ளவும்
3.
கடாய்யில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம்
சேர்த்து நன்கு வதக்கி பெருங்காயம் சேர்க்கவும்
4. தாளித்த கலவையை அரைத்த மாவில் சேர்த்து தோசை வார்க்கவும் , அவியல் / தேகாய்ச்சட்னி பொருத்தமாக இருக்கும்
5.
தண்ணீர் காலக்காவிடில், அதனை ரொட்டிகளாக கடாயில் தட்டி
சாப்பிடலாம்
அந்த ரொட்டிகள் மாலை நேர சிற்றுண்டிகளாக சாப்பிடலாம். காலையில் தட்டி ரொட்டிகள் மாலை நேர டிபனுக்கு அருமையாக இருக்கும்
கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய் தாளித்து தயிரில்
சேர்த்து இதனை சைடிஷ்ஷாக பயன்படுத்தலாம்
![]() |
| அடை ரொட்டி |


No comments:
Post a Comment