Thursday, 14 May 2020

மரவள்ளிக்கிழங்கு தோசை


 



 

தேவையான பொருட்கள்

( வேர் இல்லாத மாவுக்கிழங்கு ) மரவள்ளிக்கிழங்கு – ½ கிலோ

சாப்பாட்டு அரிசி – 100 கிராம் / 1 மானப்படி

கடலைப்பருப்பு – 50 கிராம் / ½ மானப்படி

இஞ்சி – 1 சிரியதுண்டு

பெரிய வெங்காயம் – 1

பெருங்காயத்தூள் – சிறிதளவு

 

செய்முறை

1.         அரிசி & கடலைப்பருப்பை நன்கு களைந்து தனியாக தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

2.         மரவள்ளிக்கிழங்கை நன்கு சுத்தம் செய்து, நடுவில் இருக்கும் சக்கை போன்றவற்றையும் களைந்து சுத்தம் செய்ய வேண்டும், பிறகு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்

3.         நன்கு கழுவி அதனை தண்ணீரில் 1 மணிநேரம் ஊற வைக்கவும்

4.         மிக்ஸி ஜாரில் முதலில் மரவள்ளிக்கிழங்கை நன்கு அறைத்துக்கொள்ளவும் பிறகு அரிசி பருப்பை சேர்த்து நன்கு அரைத்து அதனோடு இஞ்சியை சேர்த்து நன்கு அறைத்துக்கொள்ளவும்.

5.         சற்று கொர கொரப்பாக அறைத்துக்கொள்ளவும்

6.         கடாய்யில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி,அதனோடு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும், பெருங்காயம் உப்பு சேர்த்து அதனை அரைத்த மாவோடு சேர்த்து நன்கு கலக்கவும்

7.         தோசைக்கல்லில் நல்லெண்ணெய் தடவி, கல்தோசை போல ஊத்தவும்.. மெலிதாக வார்த்தால் தோசை பிய்ந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.

8.         மிளகாய்ச்சட்னி / தேங்காய்ச்சட்னி பொருத்தமாக இருக்கும்

Video Li

nk

 


No comments:

Post a Comment