·
அழுது முடித்து,அசந்து களைத்து உறங்கியதும் அவளுக்காக வெள்ளென விடிந்தது ஓர்
இரக்கமற்ற காலை...
·
விம்மித்தீர்த்து, உமிழ்நீர் குடித்து கண்கள் துடைத்தப்பின் தான் எத்தனை
ஆசுவாசத்தை உணர்ந்திருப்பாள்...
·
வழக்கம்போல் கண்ணீர்த்துளிகளில் நனைந்த
தலையணைகளில் கழிந்தது அந்த இரவு
·
தனித்து விடப்பட்டவர்களின் இரவு,
ஓர் நிசப்த நண்பகல்...
·
இரவாடியின் நீளமான பகலைப்போன்றதொரு பயணம், கனவிலேயே
முடித்துவிட்டேன்....
·
நினைவுகளிட்ட எச்சம் இந்த கனவுகள்...
·
இரவின் வசீகரம் நள்ளிரவில் இருப்பதாக உணர்கிறேன், அடர்த்தியான முன்னிரவின் முடிவில் என் தேடல்
ஓய்ந்து களைப்பில் கண்ணயரும் போது முடிந்து போகிறது இந்தஇரவாடல்....

No comments:
Post a Comment