Friday, 5 July 2019

தோசை/இட்லி  சைட்டிஷ்  



1.பச்சையாக புதினா/ கொத்தமல்லி ,பூண்டு,தேங்காய்,புளி,பச்சைமிளகாய் போட்டு அரைக்கனும் ,




2. இதெல்லாம் வதக்கனும் நல்லெண்ணைல-> புதினா,கொத்தமல்லி,கறிவேப்பிலை, பச்சமிளகாய், பூண்டு ஒரு கைபிடி அளவு போட்டு அரைக்கனும்




3.தக்காளி+ வெங்காயம் பச்சையா அரைச்சு ,வத்தல் தாளிச்சு
 கொதிக்கவிடுங்க.




4. வரமிளகாய லேசா எண்ணெய்ல வறுத்து, பச்சையா பூண்டு,புளி,நல்லெண்ணெய் சேர்த்து அரைச்சா 3 நாளைக்கு பயன்படுத்தலாம்





5. வறுத்த கடலை, வதக்கிய வரமிளகாய், வதக்கிய சின்ன வெங்காயம்,வதக்கிய கொத்தமல்லி அரைக்கவேண்டும்


6. தக்காளி,வெங்காயம்,வரமிளகாய், பூண்டு வரிசையாக ஒவ்வொன்றாக வதக்கி அரைத்தால் சட்னி ரெடி



7. கடலைப்பருப்பை 1/2 மணி ஊற வைத்து வடித்து, பச்சை மிளகாய்,தேங்காய் சேர்த்து அரைத்து, வெங்காயம் தாளித்து,அரைத்த விழுதை  10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சட்னி ரெடி...


8. கடாயில் கடுகு,சோம்பு தாளித்து பெரிய வெங்காயம்,4 பல் பூண்டு,மஞ்சள்ப்பொடி உப்பு  சேர்த்து நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து மசித்து வதக்கவும், தேங்காய்,பச்சைமிளகாய், சோம்பு சேர்த்து நன்கு அரைத்து வதங்கிய தக்காளியில் ஊற்றி 2 நிமிடம் கொதக்க வைத்தால் சால்னா சுவையில் சைட்டிஷ் ரெடி

9. இஞ்சி, வரமிளாய்,பூண்டு சேர்த்து வதக்கி அரைத்தால் காரமான சைட்டிஷ் ரெடி

10. தேங்காய்,பொட்டுக்கடலை,பச்சை மிளகாய் அரைத்தால் தேங்காய்ச்சட்னி ரெடி





No comments:

Post a Comment