Saturday, 24 August 2019

ரெசியூம் போடுங்க.....

வேலை தேடுகிறீர்களா?? முதலில் இதை படியுங்கள்!!
முதலில் நீங்கள் வேலை தேடும் எண்ணம் உங்களுக்கு துளிர் விடும் பொழுதே ரெசியூம்  தயாரிப்பில் இறங்கிவிடுங்கள்.


ரெசியும் தயாரிக்கும் முறை.


  • ரெசியும் தயாரிக்கும் போது Font Size & Font type மிக முக்கியம். Font size 10 அல்லது 12, Font type Times New Romanனில் இருத்தல் நலம்
  • பெயரை போல்ட் செய்திருத்தல் வேண்டும்.
  • Header insert செய்து, அதில் பெயர், மொபைல் நம்பர், மெயில் ஐடி குறிப்பிட வேண்டும்.
  • பிறகு career Objectல் , என்ன மாதிரியான வேலையில் திறமையாக செயல்பட விரும்புகிறீர்கள் என்பதை குறிப்படவும்.
  • முன் அனுபவமுள்ளவர்கள், தற்போது வேலை செய்யும் கம்பனியின் பெயர்,பதவி, எந்த மாதம் ,எந்த வருடம் முதல் அங்கு பணிபுரிகிறீர்கள் என்பதை குறிப்பிடவும் , பின்பு அதற்கு முன் எங்கு பணி புரிந்தீர்கள் என்பதை குறிப்பிடவும்
  • உங்களது Roles & Responsibilitiesஐ, தெளிவாக பாயிண்ட்ஸாக குறிப்பிட வேண்டும் அது தான் உங்களது ரெசியுமிற்கு கவனத்தை பெற்றுத்தரும்.
  • ப்ராஜெக்ட்டை குறிப்பிடும் போது,என்ன தேதியிலிருந்து என்ன தேதிவரை என்பதை அவசியம் குறிப்பிடவும்
  • வேலை விபரம் முடித்த பிறகு,கல்லூரி படிப்பு,கல்லூரியின் பெயரையும் மதிப்பெண் சதவிகிதத்தையும் குறிப்பிடுவது அவசியம். போலவே பள்ளிப்படிப்பு , பள்ளியின் பெயர் 10 & 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சதவிகிதத்தையும் குறிப்பிடவேண்டும் .
  • அதன் பின், பெர்சனல் விபரங்களில் அப்பா , அம்மா பெயர்,வீட்டு முகவரி, பிறந்த தேதி மற்றும் வருடத்தையும் குறிப்பிடவேண்டும்.
  • நீங்கள் விரும்பினால் உங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை header, வலது பக்கம் ஓரமாக வைத்துக்கொள்ளுங்கள். ப்ளூ கலர் பேக் க்ரவுண்ட்டில் இருத்தல் நலம். நீங்கள் கோட் சூட் அணிந்த புகைப்படம் சிறப்பு.
  • அந்த புகைப்படத்தில் சந்தனம்,குங்குமம்,விபூதி ஏதும் இல்லாதிருக்க வேண்டும். அப்போது தான் அது ப்ரோஃபஷனலாக இருக்கும்.


டெலிபோன் இண்டர்வியூக்கு தயாராகும்போது.....
  • முதலில் சிக்னல் நன்றாக கிடைக்குமிடத்தில் சொன்ன நேரத்தில் வந்துவிடுங்கள்.
  • இன்று காலை வரை நீங்கள் செய்த வேலைவரை கேள்விகளை கேட்க வாய்ப்பிருக்கும்,பதற்றமில்லாமல் பேசுங்கள்
  • உங்களை அறிமுகப்படும்போது , வேலை சம்பந்தமான விஷயங்களை வைத்தே அறிமுகப்படுத்துங்கள், உதாரணத்திற்கு நீங்கள் ஜாவாவில் ஆர்வம் அதிகம்,நல்ல மதிப்பெண் பெற்றதை ஹைலைட் செய்ய வேண்டும், அது தான் ஜாவா டெவலப்பர் வேலையை உங்களுக்கு பெற்றுத்தரும்.
  • கேள்விக்கு பதில் கூறுவதாக இல்லாமல், கலந்துரையாடல் போல் இண்டர்வியூவை கையாளவேண்டும்.
  • குரலில் பதற்றமோ பயமோ இல்லாது மரியாதையோடு பேசவேண்டும்
  • உங்களது சாதனைகளை வேலையோடு தொடர்பு படுத்தியே பேச வேண்டும்.
  • உங்களுக்கு தெரியவில்லை எனில், அதை செய்வதற்கான வாய்ப்பு அமையவில்லை என்பதை தெரிவிக்க வேண்டும்.
  • எக்காரணம் கொண்டும் முன்னாள் வேலை செய்த கம்பனியை குறை கூறாதீர்கள்,அதனால் உங்கள் மதிப்பும் குறைய வாய்ப்பிருக்கிறது.
  • பாரபட்சமின்றி அனைவரிடமும் கேட்கப்படும் கேள்வி " ஏன் வேறு வேலை தேடுகிறீர்கள்"? என்பது தான்.,அதற்கான பதில் மிகவும் ஜெனியூனாக இருக்க வேண்டும், "நைட் ஷிப்ட் என்பதால் உடல் ஒத்துழைக்கவில்லை"," இந்த கம்பனியின் வேலை ப்ஃபைல் பிடித்திருக்கிறது"," இது தான் நான் முயற்சிக்க விரும்புகிறேன்" என்னும்படியாக இருக்கலாம்.
  • நீங்கள் சொல்லும் "ஹலோ"விலிருந்து "தேங்க்யூ" வரை மதிப்பிடப்படுமென்பதை மறக்காதீர்கள்.
  • சத்தமில்லாத இடங்களை தேர்வு செய்வது நலம், லிஃப்ட்டின் அருகில் தான் எனக்குத்தெரிந்து பலர் டெலிபோன் இண்டர்வியூ அட்டண்ட் செய்கிறார்கள்,அதும் உங்கள் தற்போதைய கம்பனியின் ஆட்கள் கவனிக்கிறார்களா என்ற பதற்றத்தில் தான் பலர் பேசுகிறீர்கள். உங்களுக்கு வசதியான இடத்தை தேர்வு செய்து அட்டண்ட் செய்யுங்கள்.
  • பொய்யான தகவல்களை சொல்லாமல் நடந்துகொள்ளுங்கள் , அது உங்கள் மீதான நம்பிக்கையை பெற்றுத்தரும்.
நேர் முகத்தேர்வு...
எதிர் எதிரே சந்தித்துக்கெள்ளும் நேர்முகத்தேர்வு...
இதற்கு நீங்கள் மிக முக்கியமாக தேர்வு செய்யவேண்டியது நீங்கள் உடுத்தப்போகும் ஆடையைத்தான்...
  • ஆண்கள், வெள்ளை, ஊதா நிற முழுக்கை சட்டை அணிவது தான் ஃபார்மலாக இருக்கும்.
  • டீசன்ட்டாக டக்கின் செய்துவிடுங்கள். சட்டைப்பையில் எதுவும் வைக்க வேண்டாம்
  • ஷூ பாலிஷ் செய்து அணியவேண்டும். நீங்கள் அதற்கும் சேர்த்துதான் மதிப்பிடப்படுகிறீர்கள் என்பதை மறக்காதீர்கள்.
  • பெண்கள் காட்டன் சுடிதார், சேலையை தேர்வு செய்யுங்கள், சரிந்துவிழுல் சிந்தடிக் துப்பட்டாக்களை சரி செய்து கொண்டே இருந்தால் நல்ல அபிப்ராயம் இல்லாமல் போகலாம்
  • தலை விரித்தபடி இல்லாமல் கிளிப் போட்டு கொள்ளுங்கள், கூந்தல் சரி செய்து கவனச்சிதறல் ஏற்படலாம்.
  • பதற்றமில்லாமல் எதிர்கொள்ளுங்கள் கேள்விகளை.
  • சரியான நேரத்திற்கு சென்றுவிடுங்கள் , எப்போதும் ஐடி கார்டு எடுத்துச்செல்லுங்கள் இண்டர்வியூவிற்கு. செக்யூரிட்டி செக்கிங்கிள் இப்போதெல்லாம் கேட்கிறார்கள் பண்நாட்டு கம்பெனிகளில்
  • கண்களைப்பார்த்து பேசுங்கள் , உங்கள் மீதான மதிப்பை அது கூட்டும்.
  • குரலை உயர்த்தாமல் பேசுங்கள், மென்மையாக அழுத்தமாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
  • கேள்வி பதிலைப்போலில்லாமல் கலந்துரையாடல் போல் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள்.
  • தலை சொறிதல்,வேடிக்கை பார்த்தல் போன்ற உடலசைவு மொழிகள் , எதிராளியை சங்கடப்படுத்தும். கவனமாக இருங்கள்.
  • உங்கள் Behaviour தான் அங்கே பாதி மதிப்பெண்ணை பெற்றுத்தரும், பழைய கம்பெனிகளை பற்றி கேட்டால், குறை கூறாதீர்கள், பாசிடிவ்வாகவே பேசுங்கள்.
  • ஜெனியூனாக பேசி, நடந்துகொள்ளுதல் தான் ஃப்ரொஃபனலிசம், அதை கடைபிடியுங்கள்.
  • நன்றி சொல்லிவிட்டு , அவரை சந்தித்தது மகிழ்ச்சி என்று கைகுலுக்கிவிட்டு நிறைவு செய்யுங்கள், ஒரு நல்ல பிம்பத்தை உருவாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

                                              வெற்றி பெற வாழ்த்துக்கள்….

2 comments: