-
அவன் கரம் பிடித்ததில் பொறாமையில் அவன் கடிகார முள்ளும் குத்துகிறது என்னை என்னுடன் போட்டியிடுகிறது அவன் கைக்கடிகாரம் அவன் கைகளை பற்றிக்கொள்ள…
-
வெறுத்து ஒதுக்கியிருந்தால் வலித்திருக்காது விரும்பி ஒதுங்கியிருப்பதால் வலிக்கிறது!!
-
நீயில்லா நேரத்தில் உன் தேநீர் கோப்பையும் , மடித்து வைத்த சட்டையும் துணை சேர்கிறது என்னுடன்!!
-
உன் இதழோரப்புன்னகையை ரசிக்க நான் படும் பாடு!! உன் கண்ணும் , என் கண்ணும் தடுமாறுகிறது வெட்கத்தில்!!
-
ஊடல் உடைந்தது வழக்கம் போல் தவறு என்னுடையதென்று ஒப்புக்கொண்டு முடித்துக்கொண்டேன்!!
-
கட்டியனைத்ததைவிட இறுக்கமாக கைகளை பற்றிகொண்டது நெருக்கத்தை இன்னும் அதிகரித்தது நமக்குள்…
-
அவன் பார்வையில் என் கண்மையும் சிவந்து விடுகிறது வெட்கத்தில்…
-
·கண்மையும் கரைந்து போகும் சுட்டெரிக்கும் அவன் பார்வையில்
-
உன் நலவிசாரிப்புக்களுக்காவாவது நித்தம் வரவேண்டும் நூறு டிகிரி காய்ச்சலெனக்கு…..
-
கூட்ட நெரிசலிலும் நெருங்கிவருகிறது உன் நினைவுகள் விலகமுடியாமல் தவிக்கிறேன்
-
என்னவனின் தன்னுடைமையுணர்வு எனக்கு கர்வத்தை அளிக்கிறது ” நான் அவனுடையதாம்”
-
·உன் முத்தத்தால் கரைய காத்திருக்கிறது என் நெற்றிக் குங்குமம்
-
·நீ கட்டி அணைக்கும் அணைப்பை விட கைகளை இறுக்கமாக பிடிக்கும் பொழுது நெருக்கம் அதிகமாகிறது நமக்குள்
-
எத்தனை முறை அவமானப்படுத்தினாலும் அறிவு வரவில்லை எனக்கு , அன்பு வரவில்லை உனக்கு!! ·
-
பரிமாறிக்கொண்ட மின்னஞ்சல் அரட்டைகளும், குறுந்தகவல்களும் நீயில்லாத வெறுமையை ஈடுசெய்கிறது
-
நீ அனுப்பவில்லை எனத்தெரிந்தும் ஒவ்வொரு முறையும் அலைபேசி குறுந்தகவலைப்பார்த்து ஏமாறுகிறேன் பேதைபோல்
-
உன்னை காதலிப்பதை மட்டுமே செய்கிறேன் அதனால் இதுவும் தவமே
-
தேநீர் கோப்பைகள் காதலை எளிதில் சொல்லிவிடுகிறது # (அருந்திய ) கோப்பை பரிமாற்றங்களில்
-
உரையாடல்களுக்கு நடுவே நீ சொல்லும் “ம்” ம்மை உன் உதட்டிலிருந்து நான் சொல்ல ஆசை
-
உன்னை அத்தான் என்று நான் அழைத்ததற்கு காரணம் அத்தனையும் நீதான் என்பதால்
-
உனக்கு ட்டை கட்டிவிடும் முன் என் கழுத்தில் டை கட்டி ஒத்திகை பார்த்துக்கொண்டதால் நானும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே
-
முத்துப்பற்க்களால் கடித்த தடையங்கள்யாவும் முத்துமாலை ஆகியது கழுத்தில்
-
உன் முத்தத்தால் வந்த முகப்பரு மின்னிக்கொண்டே இருக்கிறது கன்னத்தில் ஈரம் காய்த்த பின்னும்.
-
என்னால் உனக்காக நேரத்தை மட்டுமே ஒதுக்க முடிந்தது உனக்கோ என்னையே ஒதுக்கிவிட முடிகிறது!!
-
மழையில் நனைந்தபடி வந்தான் என்னவன் தலைதுடைத்துவிடும் சாக்கில் என்னை துடைத்துக்கொண்டேன் அவனிடம்
-
யோசிக்கும் முன்பே உன்னை நேசித்து விட்டேன் இன்று யோசித்து கொண்டிருக்கின்றேன் ஏன் நேசித்தேன் என்றல்ல இன்னும் உன்னை எப்படி நேசிப்பதென்று
-
உன் கல் நெஞ்சத்தில் எனக்கு இடம் கொடுக்காவிட்டாலும் பரவா இல்லை உன் கல்லறையின் அருகில்லாவது இடம் கொடு. உன் அருகில் இருந்து விட்டு போகிறேன்
-
உன் தேநீர் கோப்பையாக விரும்புகிறேன் அப்பொழுதுதான் நீ தேநீர் குடிக்கும் பொழுதெல்லாம் எனக்கு முத்தங்கள் கிடைக்கும்
-
மழையில் நனைந்தபடி வந்தான் என்னவன் தலைதுடைத்துவிடும் சாக்கில் என்னை துடைத்துக்கொண்டேன் அவனிடம்
-
என் பெயரின் சுகம் அவன் அழைக்கையில் தெரிகிறது #செவிடியாய் சில நிமிடங்கள்
-
அவன் முரட்டுக் கோபத்திற்கும் என் செல்ல சினுங்களுக்கும் பொருந்திய பிறகெதற்கு ஜாதகப்பொருத்தம்
-
பிறை நிலவு சிதறிக்கிடக்கிறது எங்கள் வீடு முழுவதும் # அவன் வெட்டி எறிந்த நகங்கள்
-
செவ்விதழ்களும் நிறம் வெளுத்துத்தான் போகிறது அவன் முத்தத்தில்….
-
அவனை ஆபீஸுக்கு அனுப்பிவிட்டுவிட்டு அவன் நினைவுகளை வரவழைத்து விட்டேன் என் தனிமைக்குத்துணையாய்…

சூப்பர் !
ReplyDeleteசூடிக்கொடுத்த சுடர்கொடி :))
ReplyDeleteNice
ReplyDeleteSuper Nandhu :)
ReplyDeleteAvan athikaaram aval paarvayil
ReplyDelete