- என்னை “கல் மனசுக்காரி” என்று சொல்லும் தருணம் கடவுளாகிறேன் #கடவுளதிகாரம்
- என் கை கோர்த்துக்கொண்டே இருக்கவேண்டுமென்று ஆசையில்லை , கைவிடாமலிருந்தால் போதுமென்றே வேண்டிகிறேன் கைகும்பிட்டு கடவுளிடம்
- கடவுளால் கூட மற்றவர்களிடம் நல்ல பெயர் எடுக்கமுடியாத பொழுது சாமானியன் என்னிடம் அதை ஏன் எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை
- கடவுளுக்குத்தான் பல பெயர்கள், நிறங்கள் சாத்தானுக்கு அப்படியல்ல!!
- கோவிலுக்கு வந்துவிட்டோமே என்ற கடமைக்காக கும்பிட்ட கடவுள்கள் பல
- கடவுளே என்று பொதுவாக அழைக்காதீர்கள் , ஏன் நீங்க போங்க , நீங்க போகமாட்டீங்களான்னு கடவுள்களுக்குள் விவாதம் நடக்கும் பெயர் சொல்லி அழையுங்கள்
- பிரச்சனைகளை கேட்டு ஓடிவிடாமலிருக்க நம் முன்னோர்கள் கடவுளை கல்லாக்கி விட்டனர்!!
- எனது சாபங்கள் மற்றவர்களுக்கு பலிக்கும் பொழுது நான் கடவுளாகிறேன்
- படைத்தவன் என்னை கடவுளாகவே படித்திருந்தால் நேரத்திற்கு படைப்பவற்றை சாப்பிட்டுவிட்டு நடப்பதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்திருப்பேன்.
- நாம் படும் கஷ்டங்களை தொடர்ந்து பார்க்கும் சிறந்த ரசிகன் #கடவுள்
- கடவுள் முன் என்ன வேண்டுவது எனத்தெரியாமல் எதை வேண்டுவது என குழம்பிய நாட்கள் அதிகம், குறிப்பாக பண்டிகை நாட்கள்…
- எனது பிரச்சைனைகளை தீர்க்காவிட்டாலும் பரவாயில்லை, நான் பொலம்புவதை கல் போல்அசையாமல் கேட்பதால் பிடித்திருக்கிறது #கடவுளை
- நீ பக்தன் போல என்னிடம் வேண்டும் பொழுது நான் கடவுள் போல செவுடாத்தான் இருப்பேன்!!

No comments:
Post a Comment