கணவனை ஆபிஸூக்கு அனுப்பிவிட்டு,கணவனுக்கு பரிமாறிவிட்டு மிச்சமிருந்த இரண்டு தோசைகளை கிண்ணத்தின் ஓரங்களில் இருக்கும் சட்னியை தோசையால் வழித்தெடுத்து சாப்பிட்டு , சிங்கில் கிடக்கும் பாத்திரங்களை தேய்த்து முடித்து , வீட்டை பெருக்கித்துடைத்து, வாஷிங்மிஷினில் போட்ட துணிகளை பால்கனியில் உலர்த்திவிட்டு, நெற்றி வேர்வையை ஒற்றை விரலில் சுழற்றி எறிந்து அசதியாய் கடிகாரம் பார்த்தால் மணி 11:30 கணவனுக்குக்காக சமைத்ததில் மிச்சமிருக்கிறதா என டைனிங் டேபிளில் பாத்திரங்களை திறந்து பார்த்தால் "கொஞ்சம் சாம்பார் இருக்கிறது, கால்படி அரிசி குக்கரில் போட்டுவிட்டு அப்பளம் பொறித்துக்கொள்ளலாம் நம்ம மட்டும் தான " என அனைத்தையும் முடித்துவிட்டு இதனிடையே கிட்சனில் எஃப் எம்மில் பிடித்த பாட்டு ஒலிக்க மென்னமயான குரலில் அப்பாடலை முனு முனுத்துக்கொண்டு, காப்பி கலந்து கொண்டு நாளிதழ் பிரித்து படிக்கத்துவங்கியதும் , அலைபேசி சிணுங்கியது மறு முனையில் தோழி.. என்னடி பண்ணிட்டுருக்க என்றாள், "சும்மா வெட்டியா இருக்கேன்டி என்றாள் இல்லத்தரசி"
Tuesday, 28 October 2014
இல்லத்தரசி....

Labels:
பெண்மை
Subscribe to:
Post Comments (Atom)

super
ReplyDeleteஇல்லத்தரசிகள் யானை போன்றவர்கள் ; பல நேரங்களில் அவர்கள் பலம் அவர்களுக்குத் தெரியாது.
ReplyDelete