30 வயசாகிருச்சா என்ற ஆச்சரியமோ,பீதியோ ஏற்படவில்லை... 30 வயசுக்குள்ள நல்ல Exposure கிடைச்சதா? நல்லா படிச்சிருக்கோம்( I meant graduation) 30 வயசுக்கு 1 bachelor degree, 2 Master degreeனு வாங்கியாச்சு, கர்நாடக சங்கீதம்,பரதம்,ஸ்விம்மிங்,கரா
Wednesday, 7 October 2020
அகவை 31
கோபம் செயல்கள் மீது தான், ஆனா துரதிர்ஷ்ட்டவசமா செயல்களே மனிதர்கள தீர்மானிக்கிது.. சூழ்நிலைகளை மன்னிச்சு மனிதர்களிடமிருந்து விளகுமளவிற்கு தான் பக்குவம் இருக்கு.. மனிதர்களை மன்னிச்சு சூழ்நிலைய புறந்தள்ளுற முதிர்ச்சி வாய்க்கப்பெறனும்..
எதுலயாச்சும் போதை இருக்கனும் அழகு, ஆரோக்கியம்,சாப்பாடு,ஊர் சுத்துறது, பணம் சம்பாதிக்கிறது,பணம் செலவு பண்றது,அரட்டையடிக்கிறது, புகழ், இப்பிடி.. இந்த மாதிரி எதுலயாச்சும் போதை இருந்தா தான் நம்மல நம்மே இயக்க முடியும்..
30 வயசுக்கு இந்த அனுபவம் குறைவுனாலும்.. கற்றவையும் பெற்றவையும் தன்னை உருமாத்தி வெவ்வேறு செயல்கள்ல வெளிப்படுத்தும்...
pan , ஆதார், வாக்காளர் அட்டைன்னு எல்லாத்துலயும் பிறந்த தேதியா இந்த தேதிய குடுத்துருக்கோம்.. இந்த தேதில ஒரு நல்ல விஷயம் என்னனா நம்மல மன்னிக்கிறதுக்கும், சகிச்சுக்கிறதுக்கும், போனா போனு அலட்சிய படுத்துறதுக்கும் பிறந்தநாள் ஒரு நல்ல சாக்கு!!
வயதை கணிப்பதற்கும், இன்றிலிருந்து கூட ஒரு வயது ஆகிறது என்று எனக்கு நானே நினைவுப் படுத்த இது ஒரு நாள்!!
என்னோட இத்தனை வருச அனுபத்துல சொல்றேன் முடிஞ்சா ஞாபகம் வச்சிக்கோங்க
Take care of your Financial, Mental & Physical Health...
Subscribe to:
Post Comments (Atom)

//Take care of your Financial, Mental & Physical Health//
ReplyDeleteThank u recruiter...
Excellent Article....
ReplyDeleteஅருமை. ஒரு குறையும் வராது. எல்லாம்வல்ல இறைவன் துணை இருப்பான்.
ReplyDeleteஅன்றிலிருந்து இன்று வரை என் மகள் ஸ்தானத்திலதான் வைத்துள்ளேன். தீர்க்க சுமங்கலியா சகல் சௌபாக்கியங்களுடன் நல்லா இருக்கனும்னு வாழ்த்துறேன்