நான் MBA படித்துகொண்டிருந்த போது நிகழ்ந்த நிகழ்வுகள் இவை....
MBA படிக்க வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலிருந்த என் பெற்றோர் ஒருவழியாக படிக்க வைப்போம் ஆனால் மதுரை தான் உன் எல்லைக்கோடு, மதுரையிலையே ஒரு காலேஜ தேடு என்றார்கள்.ஒருவழியாக ஒரு B-School தேடி கண்டுபிடிச்சு சேர்ந்தாச்சு...
எங்க காலேஜோட ஸ்பெசாலிடியே , பார்ட் டைம் ஜாப் தான். அதாவது புதன் -ஞாயிறு காலேஜ்ல இருக்கணும், திங்கள் -செவ்வாய் வேலைக்கு போகணும். சில பல கம்பனிகளோட காலேஜ் டை-அப் வச்சுருக்கும், அந்த கம்பனிகள்ல தான் நம்ம வேலை பாக்கணும்.
விருதுநகர்ல ஒரு பெரிய கம்பனியோட டை- அப் இருந்துச்சு அதுல தான் போகணும்ன்னு நானும் எந்த கம்பனியோட இண்டர்வியூவும் அட்டண்ட் பண்ணலை, அந்த கம்பனிக்கு போயாச்சு, நானும் இன்னொரு பொண்ணும் , பசங்க எல்லாரும் மார்கெட்டிங் தான் அந்த கம்பனியில, அந்த பொண்ணு அக்கவுண்ட்ஸ்.. எனக்கு ஹெச்.ஆர்ல தான் வேணும் அக்கவுண்ட்ஸ் வேண்டாம்ன்னு சொன்னதுனால , என்னை பர்ச்சேஸ்ல போட்டாங்க.. ( ஏன்னா அந்த கம்பனியில ஹெச்.ஆர்ன்னு ஒரு டிபார்ட்மண்ட்ட் டே கிடையாது) ஆனா இண்டர்வியூ பண்றது பர்ச்சேஸ் மேனேஜர் தான்.
என்னோட வேலை என்னனா , பர்ச்சேஸ் என்ட்ரி போடணும், கணக்கு நோட்லையும் , சிஸ்டம்லையும் டேட்டா என்ட்ரி. இது போக பழைய கணக்கு நோட்ட டிஸ்போஸ் பண்ணனும் , அதாவது கிழிச்சு போடணும் , காலேஜுல எனக்கு இந்த வேலையில கத்துக்க எதுமே இல்லை, எனக்கு அங்க வேற டிபார்மண்ட் மாத்துங்கன்னு சொல்லியும் எதும் பண்ணல, சரின்னு நானும் லீவு போட ஆரம்பிச்சேன், ஒழுங்கா போறதில்லை.. அப்பாவுக்கு சுத்தமா பிடிக்கல நான் பண்றது, திட்டிகிட்டே இருந்தாங்க , பிடிக்காததை ஒரு லெவலுக்கு மேல செய்ய முடியலை அதான் உண்மை.. திட்டுங்க பரால்லன்னு நானும் பெருசு படுத்தலை.
இதுல கொடூரம் என்னன்னா, அந்த கணக்கு நோட்டுகள் எல்லமே 20 வருசத்துக்கு முந்தையது, தவிர கிழிக்கும் போது கை வலி பொறுக்க முடியாது, சிவப்பாகிரும், மணிக்கட்டு வலி எடுக்கும்.
காலேஜுல ஹெச்.ஓ.டி கிட்ட போய் சொன்னா இதெல்லாம் தான் நீங்க கத்துக்கணும் , உழைப்பு இதுதான்னு இன்னும் வெறுப்பேத்துனார் , ஏதாவது பண்ணனும் அட்டன்டன்ஸ் வேற பார்ட் டைம் ஜாப்க்கு இருக்கு!! அதுவேற இல்லை.. என்ன பண்ணலாம்ன்னு யோசிக்கிறப்போ ஒரு ஐடியா, நம்ம செய்ற வேலைய போட்டோ எடுத்து இவங்கட்ட காட்டினா என்னன்னு தோணிச்சு,
அப்போ கேமரா மொபைல் கூட என்கிட்ட இல்லை, அப்பாட்ட ஒரு நாள் மொபைல் மாத்திக்கலாம், எனக்கு தேவைப்படுதுன்னு வாங்கிட்டு போய் போட்டோ எடுத்தாச்சு,
அப்போ கேமரா மொபைல் கூட என்கிட்ட இல்லை, அப்பாட்ட ஒரு நாள் மொபைல் மாத்திக்கலாம், எனக்கு தேவைப்படுதுன்னு வாங்கிட்டு போய் போட்டோ எடுத்தாச்சு,
எதோ முக்கிய சாட்சி சிக்குன பெருமிதம்,போட்டோவ லேப்டாப்ல போட்டு, ப்ரேக் டைம்ல ஹெச்.ஓ.டி கிட்ட போட்டு காமிச்சு சொன்னேன் "இது தான் நான் பார்ட்- டைம் ஜாப்ல கிழிச்சது"
(இதே போல் மூன்று மூடைகள், மற்றும் சில படங்கள் கான்ஃபிடன்ஷியல்)
இனிமே என்ன கிழிச்சன்னு கேட்பீங்க??? சரி அடுத்த வருசத்துல இருந்து ஹெச். ஆர் ஸ்டூடன்ஸ்க்கு புதுசா எதாச்சும் பண்ணலாம்ன்னு சொல்லியாச்சு....இப்போ நல்ல விடிவு காலம் பொறந்துருக்கும் பிள்ளைங்களுக்கு...

நான் உங்களை என்னமோன்னு நினைச்சேன், நீங்க நிறையவே படிச்சி( படிக்காம) கிழிச்சிருக்கீங்க!
ReplyDeleteExcellent narration..not seen this article in twitter too.
ReplyDelete