சில சுவாரசியமான பதிவுகள்.....
போன பதிவில் பகுதி - I வேலை பற்றி கூறியிருந்தேன், அதில் சுவாரசியமான சில விஷயங்களை இந்த பதிவில் குறிப்பிடுகிறேன்...
ஐடி வேலையை விடவும் இந்த ஹெச் . ஆர் வேலை ரெம்ப கஷ்டம்ங்க. ஏன்னா மிஷின் கூட போராடுறதை விட மனுஷங்களோட போராடுறது ரெம்ப கஷ்டம். கோடிங் வச்செல்லாம் கணிக்க முடியாது ரிசல்ட்ட, இது சூழ்நிலை, மனநிலை சார்ந்தது, மனித வளம் மென்மையான கான்சப்ட், ஆளுக்கேத்தாப்ல பேசனும்... அதாவது "ஆடுற மாட்ட ஆடிக்கறக்கணும்,பாடுற மாட்ட பாடிக்கறக்கணும்" இதெல்லாம் , பொறுமையா இருந்தாத்தான் ஆகுற வேலை. கோவப்பட்டோம்னா முடிஞ்சது சோலி ...
சரி வேலைக்கு அப்பளை பண்றவங்க பாவம்ன்னு நினச்சீங்கனா,நீங்க தான் பாவம்!! என்னலாம் சேட்டை செய்வாங்க தெரியுமா? இப்போ ஒரு கேண்டிடேட்கிட்ட பேசி அவனோட ரெசியூம ஹயரிங் மேனேஜருக்கு அனுப்புறோம்ன்னு வைங்க, அவங்க உடனே பாப்பாங்கன்னு எதிர் பார்க்கமுடியாது, ஒரு வாரமாவது ஆகும், இதற்கிடையில கேண்டிடேட் தினமும் நமக்கு போன் போடுவான்,என்னாச்சு என்னாச்சு எனக்கு எப்போ இண்டர்வியூன்னு, அவன்கிட்ட சொல்ல முடியாது இந்த மேனேஜர் என்னும் பாக்கலைன்னு, மேனேஜர் மீட்டிங் போயிட்டார் , ஆன் சைட் போயிருக்கார், வெளியூர் போயிருக்கார்ன்னு, இன்னும் அவர் பாக்கல, பாத்து சொல்லுவார்ன்னு ஒரு வாரத்தை கடத்தினதும், நம்மல மறந்துருவாங்க சிலபேர், அப்பறம் ஒரு 15 நாள் கழிச்சு, profile shortlist , டெலிபோனிக் இண்டர்வியூ அரேன்ஜ் பண்ணுங்கன்னு சொல்லி மெயில் வரும், அப்போ சிலபேர் நம்மல மறந்திருப்பாங்க, அவங்களுக்கு நம்மல ஞாபகப்படுத்துறதுகுள்ள, மூன்றாம் பிறைல கமல் ஸ்ரீதேவிக்கு தன்னை ஞாபகப்படுத்தப்பட்ட பாட்டை விட கொடுமையா இருக்கும்...
சரி லக்கிலி, அவனுக்கு நம்மல ஞாபகம் வந்துருச்சுன்னு வச்சுக்கங்க, "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்"ன்னு ஆண்டவராகிய ஏசுக்றிஸ்த்துவுக்கு கோட்டான கோடி நன்றிகள்ன்னுட்டு, இத்தன இண்டர்வியூ, நீ நல்லா சிக்னல் கிடைக்கிற இடமா பாத்து போயிக்கோ ராசான்னு நாசூக்கா "please be reachable at this time"சொல்லிவிடுவோம்...
இவளோ சொல்லியும் சிலர் சொதப்புவாங்க..
அதுக்கு என்னமாதிரி காரணம் சொல்லுவாங்க தெரியுமா?
- மீட்டிங்ல இருக்கேன் போன் அட்டண்ட் பண்ண முடியாது
- போன்ல சார்ஜ் இல்ல
- நெட்வொர்க் இஷு
- சுவிட்ச் ஆஃப்
- டிரைவ் பண்ணிட்டு இருக்கேன், ஒருமணி நேரம் கழிச்சு
அடுத்த மெயில் நமக்குத்தான் ஏன் அவன் போன் எடுக்கலன்னு, "அதுக்கு நீ என்ன பண்ணுவ?"ன்னு கேட்கிறீங்கள்ல ?, ஏன்னா அவன வலை வீசி புடிச்சது நான் தான!! அந்தப் பாவத்துக்கு இதெல்லாம் அனுபவிக்கனும்!!! ஒன்னு ரெண்டு பேர் இருப்பாங்க நம்ம இழுத்த இழுவைக்கெல்லாம் வர்றவங்க, பிரச்சனை பண்ணாம..
இதெல்லாம் காரணங்கள் டெலிஃபோன் இன்டர்வியூக்கு மட்டும்... அடுத்த பதிவுல நேர்முக இன்டர்வியூல என்ன நடக்கும்ன்னு சொல்றேன்...


Romba kastam pola! But awesome write
ReplyDeleteup
அருமை.
ReplyDeleteஅந்த ஒரு வாரம் வெயிட் பண்ற கேன்டிடேட்டோட மனநிலை எப்டி இருக்கும்...!
ReplyDelete