
" Are you looking for a change?" இந்த வாக்கியமே எம் "திருவாசகம்", ஆமா பின்ன Recruitmentல இருந்தா இதுதானே பேசியாகணும். நாக்ரி , மான்ஸ்டர் போன்ற தளங்களே எம் புண்ணியஸ்த்தளம். இவற்றில் உங்களது ரெசியூமை அப்டேட் செய்துவிடுவது ஒரு சம்பிரதாயம் வேலை தேடும் படலம் ஆரம்பித்ததும்,அதாவது நான் இந்த வேலையில் இருக்கிறேன், இதே வேலைக்கு ஆள் தேவைப்பட்டால் என்னை தொடர்புகொள்ளவும் என்ற அறிவிப்பிற்காக,மார்ச் மாசம் ஒரு வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை மற்ற மாதங்களை விட அதிகமாக இருக்கும், அப்ரைசல் சரியாக இல்லை நல்ல % இன்க்ரிமன்ட் கிடைக்கவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு, 30-40% சம்பள உயர்வு தரும் கம்பனிகளை நோக்கி படையெடுக்கக்கிளம்பி விடுவது ஐடி கலாச்சாரம், மற்ற வேலையிலிருப்பவர்களுக்கும் இதே கலாச்சாரம் தொற்றிக்கொண்டது.. நல்ல விஷயம் தான்...
சரி உன்னோட வேலை என்ன? அதான... இந்தா வரேன்
இவ்வாறாக பேப்பர் போடப்பட்ட(ராஜினாமா செய்வதை இவ்வாறாக குறிப்பிடுவது கார்பரேட் லேங்குவேஜூ )ஆட்களின் இடத்தை நிரப்புவது எங்கள் வேலை. இதற்கான ஜாப் டிஸ்க்ரிப்ஷன் , ஈயம் பூசுனாமாதிரியும் இருக்கணும், பூசாதமாதிரியும் இருக்கணும் என்பது போலிருக்கும், அதனை படித்து ,புரிந்து கொண்டு கூகுளில் குடைந்து , டெக்னிகல் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிந்துகொண்டு, நாக்ரியில் டெக்னிகல் வார்த்தைகளை போட்டு, சில ரெசியூம்களை படித்து ,போன் செய்து மேற்சொன்ன திருவாசகத்திலிருந்து ஆரம்பித்து,பேசி அந்த ரெசியுமை ஹயரிங் மேனேஜருக்கு அனுப்பினால் ..." மிக்ஸி , இல்லையே, கிரைண்டர் இல்லையே", என்று கூறிவிடுவார், சரி விடா முயற்சி விஸ்ரூப வெற்றி என்று மீண்டும் தேடிபிடித்து ஒருவனை இண்டர்வியூக்கு அனுப்பினால்.. "காது நார்மலா இல்லை,ஐப்ரோ லென்த் இல்லை , ஷார்ப் நோஸ் இல்லை " என்று கழித்துக்கட்டி விடுவார்கள், இதற்கிடையில் நம்ம மேனேஜர்" தீயா வேலை செய்யனும் குமாரு" என மோட்டிவேட் செய்கிறேன் என்ற பெயரில் கடுப்பேற்றுவார், இதிலே ஒரு வாரம் ஓடிவிடும், அப்போது மன விரக்தியில் நாக்ரியில் விளம்பரம் போடலாம் என போட்டால், மெயில் குவியும் இன்பாக்ஸில்,இன்பாக்ஸ் ஓபன் செய்ததும், நமக்குள் ஒரு மைண்ட் வாய்ஸ் " பேக்கரிய டெவலப் பன்னதுலருந்து வெண்ணை வேணும்,பன்னு வேணும்ன்னு உசுர வாங்குறானுங்கன்னு ", 100 மெயிலில் , 4 தேறும் , அவர்களிடம் பேசி இண்டர்வியூக்கு அனுப்பும் போது, "ஜெய் மகிழ்மதி" என்று வீர முழக்கம் செய்து, குலதெய்வத்தை வேண்டிவிட்டு நாலுல இரண்டாவது தேறனும்ன்னு வேண்டிட்டு இருக்கணும், இதுல ஒன்னு தேறும், ஒன்னுமே தேறலைனா நம்ம தலை உருளும், எஸ்கலேஷேன் மெயில் அனுப்புவான் ஹயரிங் மேனேஜர், மாநகராட்சிக்கே சிசி போட்டு , பிசிசில ஊராட்சியே இருக்கும், நொந்து போய் திரும்ப ஆரம்பிச்சா, கடவுளுக்கு கருணை வந்து கொஞ்சம் முடியும் வேலை, இதுமாதிரி 10 வேற வேற பொசிஷன் வரும் , வேற வேற லெவல்ல... ஆனா இந்த ப்ரெஷர கொஞ்சமும் காட்டாம, குரல்ல கனிவோட வேலை தேடுபவர்களை அனுகும் போது , கிரடிட் கார்ட் விற்க கூப்பிடுறாமாதிரி விரட்டி விடுவாங்க, நம்ம எவளோ பெரிய வேலையில இருக்கோம்ன்னு நமக்கு தான் தெரியும், போன்ல காரிதுப்பல்கள் நிறைய வாங்கிட்டும் ,தேன்க்யூ என சொல்லிவிடும் நாங்கள் அன்னை தெரசா தானுங்களே ?? சிலர் மட்டும் ரெம்பவே ஜெனியூனாக பேசுவார்கள். 0-4 வருஷ அனுபவமுள்ளவர்களிடம் அந்த மதிக்கும் பண்பு கொஞ்சம் கம்மி, இதனாலே நான் சீனியர் பொசிஷன்களை விரும்புவது, 5+ அனுபவமுள்ளவர்கள்... இந்த வேலையில் சேர்ந்த புதிதில், இது நமக்கு செட்டாகாதுன்னு அழுத நாட்களில், ஏதோ ஒன்று பிடித்து இழுத்தது, கொஞ்சம் கொஞ்சம் மனசு ஆறி , இப்போது என் குலத்தொழிலாகிவிட்டது... ஆம் Recruitment என் குலதெய்வம்....
அடுத்த பகுதியில் சில சுவாரசியமானவைகளை பகிர்கிறேன்....
வேலை பார்ப்பதால் பணம் கிடைக்கிறது.பணத்தால் எல்லாம் கிடைத்துவிடுகிறதா? வாழ்க்கையின் அர்த்தம் தான் என்ன? அடிமையாக உணரவில்லையா?
ReplyDelete