கும்குமம் தோழி இந்த மாத( Feb 1-2015) இதழில் வெளியான என் ஜன்னல் பகுதி
இணையதளம்
இது ஒரு ப்ரொஃபஷனல் நெட்வொர்க், மற்ற ஃபேஸ்புக், ட்விட்டர் போன்று அல்ல. இது முழுக்க முழுக்க தொழில், தொழில்நுட்பம் சார்ந்த வலைதளம்.இதில் முதலில் அக்கவுண்ட் ஆரம்பித்துக்கொள்ளவும், நீங்கள் எப்படி ரெசியூம் தயாரிப்பீர்களோ , அதே போல் இதிலும் உங்கள் பணிகளை தெளிவாக குறிப்பிடவும். IT துறையை சேர்ந்தவர்களாயின் உங்கள் ப்ராஜெக்ட்டுகளை அதில் குறிப்பிடலாம்.நீங்கள் பணி புரியும் கம்பனி பெயர் வெளியிட விரும்பவில்லை எனில் confidential என்று போட்டுக்கொள்ளலாம். ப்ரொஃபைல் பிக்சர் வைக்க விரும்புகிறீர்கலாயின் ஃபார்மல்ஸில் இருக்கும் புகைப்படம் ஏதேனும் வைத்துக்கொள்ளலாம். அடுத்ததாக,நீங்கள் பணி புரிய விரும்பும் கம்பனியை searchஇல் போடவும் உதாரணத்திற்கு நான் ABC இல் பணி புரிய விரும்புகிறேனாயின், ABC என டைப்செய்து அக்கம்பனியின் HR லிஸ்டில் அவரை கண்டுபிடித்து connect க்ளிக்கவேண்டும்.ஃபேஸ் புக்கில் ஃபிரண்டு ரெக்வஸ்ட் அனுப்புவது போன்று. இதுபோல் மற்ற கம்பனியின் ஹெச் . ஆர்களோடும், உங்கள் துறை சாந்தவர்களோடும் தொடர்பிலிருக்கலாம்.குறிப்பாக உங்கள் கம்பனியில் வேலை செயபவர்களோடும் நீங்கள் தொடர்பிலிருப்பது அவசியம்.-10+yrs exp இருக்குமாயின் இன்னும் கவனமாக உங்கள் profileலை அப்டேட் செய்யவும் , உங்களுக்கான வேலை வாய்ப்பு பெரும்பாலும் linkedin மூலமாக வர வாய்ப்பிருக்கிறது.
புத்தகம்:
இந்த புத்தகம் மிகவும் ரசித்துப்படித்த புத்தகம். பதின் வயதில் பெண்கள் எதிர்கொள்ளும் எல்லா விஷயங்களும் இந்த புத்தகங்களில் பதிவு செய்திருப்பார். கதைகளாக. காதல், நட்பு, அன்பு, பாசம் என எல்லாமும் கலந்த கலவையாக, கலகலப்பாக இருக்கும் படிப்பதற்கே. ஒரு பெண்ணாக என்னை மிகவும் கவர்ந்த , ஈர்த்த புத்தகம் இது. கல்லூரி வாழ்க்கையின் ஒட்டுமொத்தமும் சுவாரசியம் குறையாமல் எழுதியிருப்பார். காதல் தோல்வி, உடைமையுணர்வு என பெண்ணின் உணர்வுகளை தொட்ட புத்தகம் இது.
பாணதீர்த்தம் &அகத்தியர் ஃபால்ஸ்:
குற்றால அருவியில் குளித்துக் கலைத்துப் போனவர்கள் , ஒரு மாறுதலுக்கு அகத்தியர் அருவி சென்று வரலாம். நெல்லை மாவட்டத்தில் " must visit" இடமென்றால் என் ஓட்டு அகத்தியர் அருவிக்குத்தான். ஜிலு ஜிலு தென்றல் காத்து, பின்பு அதனருகில் பானதீர்த்தம் அருவி,மணிமுத்தாறு "டாம்" என நெல்லை மாவட்டத்தில் அருவிகளுக்குப் பஞ்சமில்லை.கோடைகாலத்திற்கேற்ற அருமையான சுற்றுல்லா தளம்.
சினிமா:
"My little Bride" கொரியன் திரைப்படம். அற்புதமான கலகலப்பான திரைப்படம். பள்ளி செல்லும் பெண்ணிற்கு தன் தாத்தாவின் உடல்நலக்குறைவு காரணமாக, குடும்ப நண்பரின் மகனை திருமணம் செய்து வைக்கிறார்கள், எதிரும் புதிருமாக இருந்த இருவரும் திருமணத்திற்கு பின்பு எப்பிடி வாழ்கிறார்கள், எப்பிடி குடும்பம் நடுத்துகிறார்கள். பதின் வயது பெண்ணான கதாநாயகிக்கு , சக மாணவனுடன் காதல் ஏற்படுகிறது , பின்பு இருவரின் வாழ்கை என்னாகிறது? சேர்ந்தார்களா, பிரிந்தார்களா என்பதை சுவாரசியமாக எடுத்திருப்பார்கள். நான் பலமுறை பார்த்த ஒரே படம் இது.

No comments:
Post a Comment