ஞாயிறு மாலை நடேசன் பூங்கா, தினமும் காலை பனங்கல் பூங்கா, மூட் அவுட் தினங்களில் ஃபீனிக்ஸ் மால், பொழுது போக டிநகர், பாண்டி பஜார் ஷாப்பிங், பக்தியில் முக்தியடைஞ்சா திருப்போரூர், எங்கயாச்சும் போலாம்னா வெஸ்ட் மாம்பலம் சாய்பாபா கோவில், அலுவலக அவசரத்தில் ஓடித்திரிந்த டிநகர் பஸ்டிப்போ , கிண்டி ரேஸ்கோர்ஸ், அக்கரை சீமை அழகை ரசித்த அண்ணா சாலை, உஸ்ஸ் ட்ராஃபிக் என எரிச்சலடைந்த தரமணி , வேளச்சேரி செக்போஸ்ட் ரோடு, சொகுசாய் பயணித்த 19B ஏசி பஸ், இதெல்லாம் என்ன இடம்னு மனுசங்க உயிர் வாழ்றாங்கனு சலிச்சுகிட்ட மேற்கு முகப்பேர். லோக்கல் ட்ரெய்ன் லேடீஸ் கம்பார்ட்மண்ட், ஏசு நாதரே விதவிதமாய் காட்சி தரும் சின்னமலை ,சைதாப்பேட்டை, எரிச்சலுடனே எப்போதும் பயணித்த கோயம்பேடு பேருந்து நிலையம் , எக்மோர் ரயில்வே ஸ்டேஷன், சுத்தமா பிடிக்காத மெரீனா பீச், எப்பவோ போன பெசன்ட் நகர் பீச், கடைசி வரை போகவே வாய்ப்பு கிடைக்காத மகாபலிபுரம் இதெல்லாம் தான் சென்னைனா ஞாபகம் வரும்.....
சோறு போட்டு வாழவச்ச ஊரு, நந்தினினு என்னை அடையாளப்படுத்திக்கிட்ட மண்ணு..
பிரிய மனசில்லை.... என்னைக்காவது கண்டிப்பா இந்த ஊர்ல வாழ்க்கைபட்டு
வருவேன்னு நம்பிக்கை இருக்கு லவ்யூ சென்னை..... லவ் யூ டூ தி கேர்........

வணக்கம் நீங்க சொன்ன எல்லா எடத்துலயும் நானும் சுத்தி இருக்கேன் என்னாலயும் எதயும் மறக்க முடியல
ReplyDeleteசூப்பர் :-))
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசென்னை - வந்தோரை வாழ வைக்கும். சென்றோரை (மீண்டும்) சுண்டியிழுக்கும் !
ReplyDeleteஅக்கா அப்டியே சென்னைய சுத்தி பாத்த ஃப்பீல் ஆகுது
ReplyDelete