இந்த பார்கர் பேனா வாங்கணும்ங்கறது என்னோட லட்சியம்,கனவு,ஆசை. இது வாங்கியாச்சுனா இந்த கட்டை நிம்மதியா வேகும்ன்னு நான் நினைப்பேன்.
இந்த பார்கர் பேனால அப்படி என்ன
ஸ்பெஷல்ன்னு நீங்க நினைக்கலாம்.. அது ஏன்னா பார்கர் பேனாவின் விலையாகவும்
இருக்கலாம். வசதி அவளோவாக
இல்லாத குடும்பம் பழைய uniform, books வாங்கிப்படிகிறவங்களுக்கு இது பெரிய
விஷயம் தான். அப்பாட்ட எது கேட்டாலும் வாங்கிக்குடுத்துருவார் அம்மா
அப்படியில்லை அந்த பொருள் வொர்த்தான்னு பாத்து தான் வாங்கிக்குடுப்பாங்க.
ஒரு தடவ என்னோட கிளாஸ்ல ஒரு பொண்ணு பார்கர் பேனா வச்சு ரெம்ப எனக்கு ஆசை
காட்டிருச்சு எனக்கும் வாங்கனும்ன்னு ஆசை வந்துருச்சு எப்படி வீட்ல
கேட்கிறதுன்னு தெரியலை கண்டிப்பா அப்பா மாட்டேன்னு சொல்ல மாட்டாங்கன்னு
தெரியும் ஆனா அம்மா திட்டுவாங்க, அம்மாக்கு தெரியாம அப்பாட்ட
எப்பிடியாச்சும் கேட்கணும்ன்னு ரெம்ப யோசிச்சு ப்ளான் போட்டேன் ஆனா அப்பா
வேலை விஷயமா ஊருக்கு போய்ட்டாங்க, ஊர்ல இருந்து வந்ததும் அப்பா ஒரு பேனா
வந்துருக்குப்பா அது பேரு பார்கர் பேனா அதுல எழுதுனா ஹாண்ட் ரைட்டிங் அழகா
வருமாம்ப்பா, அப்பிடின்னு சொன்னேன் அப்பா புரிஞ்சுகிட்டார் போல அத சரி
பாப்போம்ன்னு சொல்லிட்டார்,( அப்பா பாப்போம்ன்னு சொன்னா அவருக்கு
இஷ்டமில்லைன்னு அர்த்தம் இப்போ வரைக்கும் அப்படித்தான்).
எனக்கு அப்பா என்கிட்ட சிரிக்காம சீரியஸா பேசுனாலே கண்ணுல கண்ணீர் வந்துரும் ( இப்போவும் அப்படித்தான்), அழுது, அடம்பிடிச்சு அம்மாட்ட அடிவாங்குனேன், அந்த பேனா பாக்கும் பொழுது ஒரு ஈர்ப்பு இருக்கும் ஒரு நிமிஷம் தொட்டு பாக்கணும் எழுதலைனாலும் ஒரு நிமிஷம் உள்ளங்கையில வச்சு பாத்துருவேன், அன்னைக்கு ஆசைப்பட்டபோ வயசு 10 அப்போ முடிவு பண்ணது நான் சம்பாதிச்ச காசுல சாகுறதுக்குள்ள ஒரு பார்கர் பேனா வாங்கனும்ன்னு. இதுமாதிரி லிஸ்ட்ல இன்னும் நிறைய திங்க்ஸ் இருக்கு.. அதெல்லாம் ஒவ்வொரு மாசம் சம்பளம் வாங்கினதும் அப்பப்போ வாங்கிருவேன் அந்த வருசையில இந்த மாச சம்பளத்துல வாங்க பார்கர் பேனா தான் லிஸ்ட்ல டிக் ஆகிருக்கு. அம்மாக்கு கால் பண்ணி சொன்னேன் இது என்ன பெரிய சாதனையான்னு கேட்டாங்க எனக்கு இது சாதனைதான்னு சொல்லிட்டேன். வாழ்கையில ஒவ்வொரு விஷயத்தையும் புதுசா பாக்குற எனக்கு இது சாதனை. எத்தன பேருக்கு இப்பிடி 15 வருஷ ஆசைய நிரவேத்துற பாக்கியம் கிடைக்கும்? எனக்கு கிடச்சுருக்கு உங்களுக்கு இது இது ரெம்ப silly / funnyயா இருக்கலாம் சின்ன வயசு ஆசைகள் நிறவேத்துறப்போ கிடைக்கிற சந்தோசம் எதுலையும் கிடைக்காது!! மை பார்கர் பென்!!

Enaku play station vankanumnu asai..atha naan en first salary la than vankinen
ReplyDeleteநான் வேலைக்கு போகும்போது ஒரு டிவிஎஸ் மொபெட் கேட்டேன். வாங்கித்தர வசதி இருந்தும் மறுக்க பட்டது பெரிதாய் தெரியவில்லை. ஆனால் அதன் பொருட்டு நேர்ந்த அவமானம் பெட்ரோல் போட வக்கில்லாத உனக்கு வண்டி ஒரு கேடா? 3 மாதத்தில் நிலைமை மாறியது. வெளிநாட்டு வேலை . முதல் பைக் yamaka with fancy no அன்றைய காலகட்டதில் அது பெரிய விஷயம்.
ReplyDelete