Monday, 1 June 2015

நீங்க நான் ராஜா சார்.....


இசை ராஜாவின் பிறந்த நாளன்று கொஞ்சம் ராஜாவை சிலாகிப்போம் என்பதற்கான பதிவு....
நினைவு தெரிந்த நாளிலிருந்து (அதாவது நினைவிலிருக்கும் அந்த நாள் தானே நமக்கு நினைவு தெரிந்த நாள்) தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ பாடலை கேட்டால் ஏதோதோ இனம்புரியாத மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும்.... இன்றும் அப்படியே.... மனம் சடைக்காத காது புளிக்காத பாடலைகளை மொபைலிலும், லேப்டாப்லிரும் தேடிப்பிடித்து கேட்பது ராஜா பாடல்களை தான்.... மனதிற்கு மிக நெருக்கமான பாடல் இந்த "தென்றல் வந்து தீண்டும்போது"பாடல்.... உறக்கமற்ற இரவுகளை படுக்கையிலேயே கடந்திருக்கிறீர்களா? ராஜா பாடல்களோடு கடந்திருக்கிறேன் நித்திரையற்ற என் இரவுகளை.. உன்ன நினைச்சேன் பாடலைக்கேட்டு கலங்கியகண்களுக்கு நீயொரு காதல் சங்கீதம் பாடி இளையநிலா பொழிந்த அந்த சங்கீத மேகத்தில் ஆசைய காத்துல தூதுவிட்டு தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே என உறங்க வைத்து எப்பவும் நான் ராஜா என கெத்து காமிக்கும் ராஜா ஓர் இசைக்கடவுள்...
ஹேப்பி ஹேப்பி பெர்த்டே ராஜா சார்....

2 comments:

  1. நேற்று இல்லை நாளை இல்லை, எப்பவும் நான் ராஜா. கோட்டை இல்லை கொடிகள் இல்லை அப்பவும் நான் ராஜா. # இதயராஜா

    ReplyDelete