அவ்வளவு எளிதல்ல "எப்போ கல்யாணம்" என்ற கேள்வியை கடப்பதற்கு,.. புன்னகைத்து கடப்பதற்கு எளிதாய் இருக்கிறது, எப்படி இருக்க என்பதைவிட எப்போது கல்யாணம் தான் அதிகம் கேட்கப்படும் கேள்வியாக இருக்கும், திருமண அழைப்பிதழ்களை யாரேனும் கொடுக்கும்போதே , போகாததற்கான காரணத்தை யோசித்து வைத்துகொள்வது தான் ஏதோ புத்திசாலித்தனம் போல் , பிறந்த வீட்டிற்கு போகாமல்,பெற்றோருக்கு பாரமாக இல்லாமல், பிடிக்கிறதா , பிடிக்கலையா என்று இதுவரை யோசிக்காத வேலையை செய்துகொண்டு நாட்களைக்கடத்திக்கொண்டு, காதலிப்பதாக கூறிய ஆண்களை நிராகரித்துவிட்டதை பிழையென கருதி சில நிமிடங்கள் , பின்னோக்கி சென்று அதனை அழகிய தருணங்களாக கருதி , நினைவில் அசைபோட்டுக்கொண்டு அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டோ, தவர விட்டோமே என்றோ, நல்லவேளை அவன் காதலை நிராகரித்தோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு , கற்பனைக் காதலனை கணவனாக எண்ணிக்கொண்டு கனவில் ஓரிரு நிமிடங்கள் நினைவில் வாழ்ந்துவிட்டு நினைவு திரும்புகையில் "எங்க இருக்கானோ எனக்கென பிறந்தவன் " என செல்லக்கோபம் கொண்டு நினைவு திரும்புகையில் விழிகள் கொஞ்சம் நனைந்திருக்கும்......
Friday, 5 December 2014
முதிர்கன்னி கனவு

Labels:
பெண்மை
Subscribe to:
Post Comments (Atom)

உண்மை பதிவு, எளிமையான வரிகளின் எதார்த்தம்..
ReplyDeleteநன்றி :-)
ReplyDeletemmm..
ReplyDeleteசூப்பர் .. :)
ReplyDeleteஎதார்த்தம்!! நினைவை ஒட்டமிட வைக்கும் வாரத்தைகள்.. அருமை ☺
ReplyDeleteஅருமை 👍
Delete