- மொழி பெயர்க்கவே முடியாத
மொழி #கண்ணீர்
- கண்ணீர் #கவன_ ஈர்ப்பு_
விசை
- மறைத்த சோகங்களை விட
வெளிப்படுத்திய கண்ணீர்த்துளியின் எண்ணிக்கை சற்று குறைவு தான்....
- உதிரமும் உருகித்தான்
போகிறது கண்ணீராக .
- கண்ணீர் தேசம் #கண்கள்
- கண்ணீர் சிந்தும் என்னைக்
குருடனாக்குகிறாய் உன் உருவம் மறைத்து #கடவுளதிகாரம்
- ஓயாத தொடர்புள்ளிகள் #கண்ணீர்த்துளி
- விழி நீர் முத்தம் #கண்ணீர்
- நிச்சயம் உனக்காக நான்
சிந்திய கண்ணீரை திரும்பப்பெற்றுவிடுவேன் என் மரணத்தில்..."
- முதல் முறை ஒருத்தியின்
கண்ணீரை துடைத்த போது வெறுப்பில் துடைத்தேன்,
- அந்தக்கண்ணீருக்குக்காரணம்
நான் என்பதால்
- கண்ணீர் தேங்கிய கண்களில்
பாசம் படிந்திருக்கிறது
- கவலைகளின் மடியில்
வாரியணைத்துக்கொள்ளும் இருட்டும் தனிமையும் கண்ணீர்த் துடைக்கிறது
- சிலர் கோபங்களை
வார்த்தைகளாக மாற்றுகிறார்கள், சிலர்
மௌனங்களாக சிலர் மட்டும் கண்ணீராக
- கோபங்களை எப்படியேனும்
வெளிப்படுத்தி விடுகிறேன் குறைந்தபட்சம் கண்ணீரில்
- கண்ணீருக்கு பஞ்சம்
வந்ததில்லை கண்களில் எந்த காலமும்
- கண்ணீர்த்துளியை
மறைக்கத்தான் எவ்வளவு மெனக்கிட வேண்டியிருக்கு!! விம்மல் சப்தம்
காட்டிக்கொடுத்து விடுகிறது இரவில்
- கண்ணீரின் சுமையை
குறைத்துவிடுகிறது வார்த்தைகள் சில நேரங்களில்
- காயங்களின் வலி கண்ணீர்
வழி
- கண்ணீரில்
முடிந்துவிடுகிறது அனைத்து உணர்வுகளும்
- தொலைந்த பொருளைத்தேடும்
பொழுது மட்டும் கண்ணீர் மறைக்கிறது கண்களில்
- கதைகேட்டுத் தூங்கிய
நாட்களைவிட , கண்ணீர்த்துடைத்து
தூங்கிய நாட்கள் அதிகம்!!
- கண்ணீரும்
வெட்கப்பட்டு ஒளிகிறது ஆட்களை கண்டால்....
- கண்களில் தவிழ்ந்து
கன்னத்தில் விழுந்து ஓடுகிறது #கண்ணீர்
- எளிதில் உடைந்தது கண்ணாடி
இதயம் சிதறிய துண்டுகள் கண்கள் வழியே கண்ணீராக சிதறுகிறது....
- விலை மதிப்பில்லாத
கண்ணீரும் கீழே விழுந்து உடைகிறது சமயங்களில்....
- துக்கம் தாலாட்டும் இரவில்
கண்ணீர் முத்தமிடுகிறது கன்னத்தில்....
- விடையறியா சில
கேள்விகளுக்கு கண்ணீர் முற்றுப்புள்ளி வைக்கிறது
- இறந்த காதலை முற்றிலுமாக
கரைக்க முடியவில்லை கண்ணீர் வடிவில்,,,,,
- உடைந்து சிதறும் கண்ணாடியோ
கையை கிழிக்கிறது, உடையும்
கண்ணீர்த்துளியோ என் மனதை கிழிக்கிறது
- கண்ணீரை சேமிக்கும்
வங்கியாகி போனது எனது கைக்குட்டை
- விம்மல் சப்தம் யாருக்கும்
கேட்காமலிருக்க துணிகளை வாயில் அடைத்துக்கொண்டு அழுத இரவுகளுமிருக்கிறது என்
வாழ்க்கையில்...

The pain of spinster portrayed very well..... keep rocking :-)
ReplyDeleteநிச்சயம் உனக்காக நான் சிந்திய கண்ணீரை திரும்பப்பெற்றுவிடுவேன் என் மரணத்தில்..."
ReplyDeleteமறைத்த சோகங்களின் விட = மறைத்த சோகங்களை விட
ReplyDelete:p
ReplyDeleteமனம் கனத்து போய்விட்டது தோழி.
ReplyDelete:-)
ReplyDeleteகண்ணீர் தேவபாஷை.அதை மனிதர்களிடம் பேசுவதில் பயனில்லை!
ReplyDeleteவிம்மல் சப்தம் யாருக்கும் கேட்காமலிருக்க துணிகளை வாயில் அடைத்துக்கொண்டு அழுத இரவுகளுமிருக்கிறது என் வாழ்க்கையில்...
ReplyDeleteஎதேச்சையாக வந்தேன் ..நல்ல பதிவுகள் .. வாழ்த்துக்கள் ..
ReplyDeleteமீண்டும் வருவேன் ..
அன்புடன்
விஷ்ணு