Thursday, 6 November 2014

நோக்கியா பேஸிக் மாடல்

புத்தாண்டு தினத்தன்று ( 01-01-2014) தான் நோக்கியா பேஸிக் மாடலோட அருமை தெரிஞ்சது!!
   

கல்லூரித்தோழி ஒருத்தி அலைபேசிக்கு அழைத்தாள், “என்னடி விஷ் பண்ணமாட்டியா நாங்க தான் முதல்ல விஷ் பண்ணனுமோ திமிர்பிடிச்ச நாயே” என்றாள் கோபத்தோடு " ஹலோ சொன்னதோடு காதில் வைத்திருந்தேன் எதுவும் பேசலை இடையில்!! திட்டட்டும்ன்னு விட்டுட்டேன் , நான் வக்கிறேன்டி என்றாள், ம் சரி வச்சுருன்னு சொல்லிட்டேன் , மறுபடியும் திமிருடி" என்றாள்,

இப்போ என்னோட turn ” ஏ நாயே நீயே காலையில எல்லாருக்கும் whats appல க்ரூப்ல போட்டு அனுப்பிட்ட ,என்கிட்டே whats appஇல்ல அதுனால தான் கால் பண்ணிருக்க அதுக்கு இவளோ ஸீனா ஓடிப்போ நாயே” அப்படின்னு சொன்னேன்,  ஆமாடி அதுனால தான் உன்கிட்ட பேசுறேன் மத்தவங்களுக்குலாம் நான் பேசவே இல்லை, எல்லா ஸ்பெஷல் டேஸ்க்கும் நீ மட்டும் ஸ்பெஷல்லா இருக்கடின்னு ஐஸ் வச்சுருச்சு அந்த புள்ள.

#ஆம்_நோக்கியா_ரியல்லி_கனைக்டிங்_பீப்பிள்

1 comment:

  1. it's true.. pongal vazhthu attai anuppiya santhosam, ippothu mutrilum illai..

    konja kalam sms.

    appuram whatsapp..

    ippo athuvum illai...

    ethanaiyo peru anuppuvanga, nama anuppi than agapoguthanu agiruchi...

    ReplyDelete